Load Image
dinamalar telegram
Advertisement

கோவா வளர்ச்சிக்காக 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு: பிரதமர் மோடி பெருமிதம்



புதுடில்லி: கோவாவின் வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என ரோஜ்கார் மேளாவில் பிரதமர் மோடி பேசினார்.

Latest Tamil News


இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தபை் போக்கும் வகையில் பிரதமர் பிரதமர் மோடி ரோஜ்கார் மேளா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.இத்திட்டத்தின்படி அடுத்த ஒன்றரை வருடத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. குஜராத்தில் 13 ஆயிரம், காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் கிராமப்புற பகுதிகள் வரலாறு காணாத வேலையில்லா திண்டாட்டத்தில் சிக்கி தவித்து வருகின்றன. கிராமப்புற வேலையில்லா திண்டாட்டம் கடந்த 6 ஆண்டுகளாக 7.02 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என எதிர்க்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என பா.ஜ.., வாக்குறுதி அளித்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில், 16 கோடி வேலைகள் எங்கே என காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், ரோஜ்கார் மேளா திட்டத்தின்படி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டம் குறித்து அடுத்தடுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கோவாவில் நடத்தப்படும் ரோஜ்கார் மேளாவில் வீடியோ வழியாக புதுடில்லியிலிருந்து பிரதமர் மோடி பேசினார்.

Latest Tamil News

அப்போது பிரதமர் மோடி பேசியவதாவது: கோவா அரசு பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பும் வேலைகளில் இறங்கியுள்ளது. அதிக அளவில் நியமன கடிதங்கள் இன்று வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
வரவுள்ள மாதங்களில் கோவா போலீசார் பணியிலும் ஆள்சேர்ப்பில் ஈடுபடும். இதனால் கோவா காவல் துறையை விரைவில் வலிமையாக்கும்.

கோவாவின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் முதலீடு செய்துள்ளது. கோவாவின் மொப்பா நகரில் விமான நிலையம் கட்டமைக்க ரூ.3 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வழங்கப்பட்டு உள்ளது. கோவா சுற்றுலா துறை மெகா திட்டம் மற்றும் கொள்கை வழியே வளர்ச்சி பணிகளை அமல்படுத்த பல்வேறு வழிகளை கோவா அரசு கண்டறிந்து உள்ளது. இது, மாநில சுற்றுலாவில் மிக பெரிய முதலீட்டை கொண்டு வரும்.

கோவா ரோஜ்கார் மேளா வழியே இளைஞர்கள் நியமன கடிதங்களை பெறுகின்றனர். உங்களது அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த 25 ஆண்டுகள் தற்போது துவங்குகின்றன. 2047-ம் ஆண்டில் நாட்டின் மற்றும் கோவாவின் வளர்ச்சியை உறுதி செய்வது தற்போது உங்களிடம் உள்ளது. பா.ஜ., ஆளக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் ரோஜ்கார் மேளா ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசும் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் பே சினார்.


வாசகர் கருத்து (10)

  • dsfsf - chennai,இந்தியா

    மோடி அரசு அச்சடித்ததா ?. அனைத்தும் மக்கள் பணம் . குஜராத் தேர்தலுக்கு மட்டும் ஒரு லச்சம் கோடி

    • hdhdhdh - ,

      dsfsfsf போடா நரவாய..ஓடி போயிரு

  • sankar - சென்னை,இந்தியா

    பிஜேபீ ஆட்சி அல்லாத மற்ற மானிலங்களுக்கு பட்டை நாமம் சாத்தும் பாரபட்ச மோடி.... நான் அனுப்பிய முழுமையாக ப் போடாமல் தினமலர் மறைப்பது ஏன்?பாரபட்ச தினமலர்

  • அப்புசாமி -

    அப்போ எட்டு வருஷமா பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கு வேலை வாய்ப்பு சும்மா பிச்சிக்கிட்டு போயிருக்கணுமே கோவாலு? இன்னிக்கி புதுசா முழிச்சிக்கிட்டு கோவா அரசு வேலைகளை நிரப்புதாம்... நம்புறியா கோவாலு?

  • sankar - சென்னை,இந்தியா

    பிஜேபீ ஆட்சி அல்லாத மற்ற மானிலங்களுக்கு பட்டை நாமம் ....

  • அப்புசாமி -

    வருஷத்துக்கு ரெண்டு கோடி வேலைன்னு வாக்குறுதி குடுத்தது வேற வாய். இப்போ ஒன்னரை வருஷத்தில் 10 லட்சம் வேலைன்னு சொல்லறது வேற வாய். வடிவேலுடா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement