Load Image
dinamalar telegram
Advertisement

சர்நேம் இன்றி இனி விசா கிடையாது : ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

Tamil News
ADVERTISEMENT



'பாஸ்போர்ட்டில் சர்நேம் இல்லாமல் ஒரு பெயர் மட்டும் கொண்ட பயணியருக்கு, இனி சுற்றுலா விசா உட்பட எந்தவொரு விசாவும் வழங்கப்பட மாட்டாது' என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


பாஸ்போர்ட்டில் சிங்கிள் பெயர் கொண்ட பயணிகள் சுற்றுலாவுக்கோ அல்லது மற்ற எந்தவொரு வகையான விசா பெறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது. பயணிகளின் முதல் பெயர் மற்றும் கடைசி பெயர் தெளிவாக குறிப்பிடுவது கட்டாயம் எனவும், புதிய நடைமுறை வரும் 28ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் உத்தரவின்படி, நவ., 21 முதல் சுற்றுலாவுக்கு அல்லது வேறு எந்த வகை விசாவில் பயணிக்க, பாஸ்போர்ட்டில் ஒரே பெயரைக் கொண்ட பயணிகள், எமிரேட்ஸில் இருந்தோ, அல்லது எமிரேட்ஸ் வந்து செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
Latest Tamil News
இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள், பாஸ்போர்ட்டில் ஒரே பெயரை மட்டும் கொண்டவர்கள் மற்றும் குடியிருப்பு அனுமதி அல்லது நிரந்தர விசா வைத்திருப்பவர்கள், அதே பெயரில் 'முதல் பெயர்' மற்றும் 'கடைசி பெயர்' புதுப்பிக்கப்பட்டிருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு, தங்கள் மேலாளரையோ அல்லது கோஇண்டிகோ.காம் இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே திடீர் உத்தரவால் பாதிக்கப்பட்ட பயணிகள், இதில் மத்திய அரசு தலையிட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய விதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (8)

  • பிரபு - மதுரை,இந்தியா

    தமிழ்நாட்டில் பெயருக்கு முன்னாள் உள்ள இனிஷியல் என்பதை விரிவாக்கம் செய்து (தந்தையின் பெயர்) சர்நேம் ஆக பாஸ்போர்ட்டில் பதிவு செய்யப்படுகிறது. மற்ற தென் மாநிலங்கள்/வடஇந்தியாவில் சர்நேம் என்பது அவர்கள் பெயரிலேயே இருக்கிறது. யுஏஇ-வின் இந்த அறிவிப்பு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்போரை பாதிக்காது.

  • Siddhanatha Boobathi - `Ajman,ஐக்கிய அரபு நாடுகள்

    தாயின் பெயரை சர்நேமாக வைத்தால் அது கூத்தா என்ன ஒரு அறிவீனம்

  • sunny raja -

    சாதிப்பெயர்களை கடைப்பெயராக (surname or lastname) உபயோகிக்கும் பழக்கத்தை, 1920 லேயே நிறுத்தினார். முற்பபோக்குப்படுத்தப்பட்ட சாதியினர் நிறுத்தி விட்டதாக நிலையில், பல பிற்போக்காளர்கள் உபயோகிக்கத் தொடங்கி விட்டனர்.

  • Sampath - Chennai,இந்தியா

    People with single name can add " thandai" periyar, and "amma" JJ ... Tamil culture is going to hell.

  • kulandai kannan -

    தமிழர்களுக்கு பிரச்னைதான். மற்ற மாநிலங்களில் ஜாதிதான் சர்நேம். புரட்சி செய்கிறேன் பேர்வழிஎன்று ஜெயலலிதா, தாயின் பெயரையும் இனிஷியலாக்கலாம் என்று கூத்தடித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement