Load Image
dinamalar telegram
Advertisement

ராஜிவ் தியாகம் சீமானுக்கு தெரியாது!

Tamil News
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஆனால், சீமான் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு, இது கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

'ராஜிவ் என்ன பெரிய தியாகியா? சோனியா வெளிநாட்டை சேர்ந்தவர் தானே? அவரையும் நாடு கடத்த வேண்டியது தானே?' என்று உளறிக் கொட்டி இருக்கிறார் சீமான். இதைக் கேட்கும் போது, ராஜிவை கொன்றவர்களை மன்னித்த, சோனியாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. சோனியா, வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், முறைப்படி குடியுரிமை பெற்றவர்.

ராஜிவ் என்ன பெரிய தியாகியா என்று கேட்கும் சீமான், விடுதலை புலிகள் தலைவராக இருந்த, மறைந்த பிரபாகரன் செய்த தியாகங்களை பட்டியலிட தயாரா? ராஜிவை மட்டும் விடுதலை புலிகள் கொடூரமாகக் கொலை செய்ய வில்லை. ஈழத்தை சேர்ந்த தமிழர்களின் உரிமைக்காக அறவழியில் போராட்டம் நடத்திய பத்மநாபாவையும், அமிர்தலிங்கத்தையும் கொன்றனர்.
Latest Tamil News
ராஜிவ், பத்மநாபா, அமிர்தலிங்கம் மரணத்திற்கு பரிகாரமாக, பிரபாகரன் குடும்பத்தை கூண்டோடு அழித்து பரிகாரம் தேடிக் கொண்டது, இலங்கை ராணுவம்.

'கத்தி எடுத்தவன், கத்தியால் சாவான்' என்ற பழமொழி, பிரபாகரன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. நேரு, இந்திரா, ராஜிவ் போன்றோர், இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள், சீமான் போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சீமான் போன்ற வெத்து வேட்டுக்கள் என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை தியாகிகளாக, குற்றமற்றவர்களாக காட்ட முயற்சித்தாலும், தமிழக மக்களின் கண்களுக்கு, அவர்கள் என்றும் கொடூர கொலைக்காரர்களாகவே தெரிவர்; அவர்களை என்றுமே மனதளவில் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.


வாசகர் கருத்து (84)

 • Jaba Jaba -

  0

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  கேள்வி என்னவென்றால் ராஜிவ் மேல்.வெறுப்பு இருந்திருந்தால் தனியாக அவர் மேல் தாக்குதல்.நடத்தி இருக்க வேண்டும். வேறு 16 பேர் கொலை செய்யப் பட்டார்களே அவர்கள் சாவுக்கு காரணமானவர்கள் தானே.இந்த 7 பேரும். அவர்களுக்கு சீமான் என்ன செய்து இருக்கிறார். இவர் ஒரு கோமாளி.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  ஆமைக்கறி என்ற பெயர் எப்படி வந்தது? சீமானைய (சைமன் ) பற்றி கேட்க வேண்டுமென்றால் விஜயலக்ஷ்மி இடம் விவரம் இருக்கிறது படம் கிடையக்காவில்லைய என்றதும் அரசியல் வியாபாரத்தில் மூலதனமில்லாமல் ஆரம்பித்து வெளி ஊர்களுக்கு செல்லும்போது பைவ் ஸ்டார் ரூம் ஏஆர் போராடவில்லைஎன்றும் சீரும் அரசியல் வாதியாக உரு பெற்று விட்டார். ஊரன் நெய்யெ ஏன் பொங்டாட்டிகைய்யே .அதற்கும் ஒரு கூட்டம் . சத்தம்போட்டு .ஆ ஊ என்று குரலாய் உயர்த்தி ட்ராமா டைலாக் குடுத்து மகளாய் உசுபி மூலைஎய் மளுங்க செய்வது . .

 • Rajah - Colombo,இலங்கை

  ராஜி காந்தி நல்லவரோ கெடடவரோ ஆனால் அவரை அந்நியர்கள் இந்திய மண்ணில் கொலை செய்தது குற்றம் என்று சொல்கின்றீர்கள். அப்படியானால் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு இந்திய அந்நியப்படை செய்த கொடுமைகள் சரியானதா? இன்னொரு நாட்டிற்கு எதிராக அங்கு புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து பயிர்ச்சி அளித்தது சரியாயன செயலா? இதை பாக்கிஸ்த்தான் இந்திய முஸ்லீம் தீவிர வாதிகளுக்கு செய்திருந்தால் அமைதியாக இருப்பீர்களா? இந்த சீமான் வைகோ போன்றவர்களை இலங்கைத் தமிழர்கள் கணக்கில் எடுப்பதில்லை. அது அவர்கள் செய்யும் அரசியல். செய்த பாவங்களுக்கு கிடைத்த தண்டனை.

  • Madhu - Trichy,இந்தியா

   புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு இணக்கம் சுமுகமாக ஏற்படவும், அமைதி திரும்ப ஏதுவாக புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பெறவும் பின்னர் ஜனநாயக ரீதியாக் வட கிழக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனநாயக முறையில் தேர்தல் நடந்திடவும் இன்னமும் இது போன்ற பல காரணங்களுக்காகத்தான் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் விளைவாக இந்திய அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது. அவர்களுக்கு ஆயுதமேந்தி போரிட ஆணை பிறப்பிக்கப் படவில்லை தற்காத்துக் கொள்ளவும் கூட முதலில் அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், புலிகள் ஒரு கட்டத்தில் இலங்கை அரசுடன் ஒன்று சேர்ந்து 'நாங்கள் அடித்துக் கொள்வோம் அணைத்துக் கொள்வோம். நீங்கள் யார் இதில் தலையிட? இந்திய நாய்களே வெளியேறுங்கள் என 'போஸ்டர்'அடித்து வெளிட்டனர். தமிழகத்திலும் கூட இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இந்திய அமைதிப்படையின் பணி வெற்றியடையவில்லை மாறாக இலங்கைப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த அநேக தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் அநேகர் உயிரிழந்தனர் பலர் புலிகளால் இலங்கை காடுகளுக்குள் கடத்திச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் தங்கள் வீரர்களை மீட்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் அங்கே இந்திய ராணுவம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால், பல தமிழ்ப் பெண்கள் பலவந்தமாகக் கற்பழிக்கப்பட்டார்கள் என்று சொல்வதெல்லாம் புலிகள் தாங்கள் செய்த செயல்களுக்கு நியாயம் கற்பிக்கவே என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இன்று உள்ளது போன்று ஒரு திரந்தவெளி ஊடகம் '80, 90களில் இல்லை எனவே, என்ன வேண்டுமானாலும் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம். ஒருவேளை இது முற்றும் உண்மையானால் இந்தியா மீது போர்ப் பிரகடனத்தைப் புலிகள் அறிவித்திருக்க வேண்டும். பின்னர் நேரடியாகவே இந்திய ராணுவம் புலிகளை ஒடுக்க களத்தில் இறங்கியிருக்கும். அவர்களுக்கு அவ்வாறு செய்யத் துணிவில்லாததால்தான், திட்டமிட்டு தங்கள் மீது பழி ஏற்படாதவாறு ஒரு பயங்கரவாதச் செயலை தமிழக மண்ணிலே நிகழ்த்தி ராஜிவ் காந்தி அவர்களையும் அவர்களோடு சேர்த்து மற்றும் பலரையும் கொன்றார்கள். அனால், இந்திய புலன் விசாரணைக் குழு திறமையாகச் செயல்பட்டு புலிகளின் முகத்திரையை கிழித்தார்கள். இன்னமும் புலிகளின் ஆதரவாளர்கள் நியாயம் கற்பித்துக் கொண்டுள்ளனர். போர் என்பது மிகவும் கொடுமையானதுசேர, சோழ, பாண்டியர்கள் காலத்திற்குப் பின்னர் தமிழர்கள் நேரில் போரில் ஈடுபடவில்லை நம் இளைஞர்கள் இந்திய ராணுவப் படையில் உள்ளனர். அது வேறு விஷயம். கடவுள் அருளில் போரின் விளைவுகளை ஆஃப்கான், காஷ்மீர் மக்களைப் போலவோ, பங்களாதேஷ் மக்களைப் போலவோ இங்குள்ள மக்கள் அனுபவிக்கவில்லை. எனவே, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என நம் ராணுவ வீரர்களின் மீது பழி சுமத்தலாகாது. போரின் விதிகள் எப்போது எங்கே யாரால் மீறப்படும் எனச் சொல்ல இயலாது. மகாபாரத யுத்தத்தில் கூட விதிகள் மீறப்பட்டன. அமைதிப் பூங்காவாக உள்ளது என்று அறியப்படும் தமிழகத்தில்தான் இன்று பாலியல் வன்முறைகள், கொலைகள் அரங்கேறுகின்றன. ஊடகங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எதிரணியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள். தீவிரவாதம் வளர்வதை ஒரு சில வெற்றிகளால் நாம் ஒருபோதும் ஆதரிக்க இயலாது.

 • vbs manian - hyderabad,இந்தியா

  தமிழக அரசியலில் புதிதாக எதுவும் தெரியாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement