Load Image
dinamalar telegram
Advertisement

மோடியுடனான ஆலோசனைக்கு ஸ்டாலின் செல்வாரா?:ஜி - 20க்கான முன்னோட்ட கூட்டத்திற்கு அழைப்பு

Tamil News
ADVERTISEMENT
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், 'ஜி - 20' மாநாடு ஏற்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக, புதுடில்லியில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கவுள்ளது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜி - -20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான்.

கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கிறது.

கூடுதல் முக்கியத்துவம்



நரேந்திர மோடி பிரதமரான பின் இந்த அமைப்பின் ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டத்திலும், இந்தியாவின் கருத்துக் களும், பங்களிப்பும் சர்வதேச அளவில் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் ஒவ்வொரு முறையும் தலைமை பொறுப்பேற்ப துடன், அங்கு ஜி -- 20 மாநாட்டை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில், இந்த அமைப்பிற்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளதுடன், இது குறித்த மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்துவதற்கான வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

இந்த மாநாட்டை, அரசியல் ரீதியாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். இது, சர்வதேச நாடுகள் மற்றும் அவற்றின் தலைவர் கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய மாநாடு என்பதால், இதில் ஜனநாயகப்பூர்வமாக, எதிர்க்கட்சிகளின் பங்களிப்பும் இருந்தாக வேண்டுமென்ற நோக்கில் பல அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்பதென முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, வரும் 5ம் தேதி புதுடில்லியில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க உள்ளார்.இந்த கூட்டம், ஜனாதிபதி மாளிகை கூட்ட அரங்கிலோ அல்லது விஞ்ஞான் பவன் அரங்கிலோ நடத்தப்படலாம் என தெரிகிறது.

கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில், அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி முக்கிய அரசியல் கட்சி களின் தலைவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஒவ்வொரு தலைவருக்கும் போன் வாயிலாகவும் அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பது குறித்து, தமிழக அரசு தரப்பிலிருந்து இன்னும் உத்தரவாதம் தரப்படவில்லை. ஒருவேளை முதல்வர் வரவில்லையென்றால், அவர் சார்பில் பிரதிநிதி யாராவது கலந்து கொள்ள லாம் என தெரிகிறது.

கூர்ந்து கவனிப்பு



பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி யில் உள்ள மிக முக்கிய கட்சியாக, தேசிய அளவில் தி.மு.க., பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், தி.மு.க.,வின் நகர்வுகள் அனைத்தையுமே தேசிய அரசியல் வட்டாரங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன.எனவே, பிரதமரின் அழைப்பை ஏற்று புதுடில்லிக்கு தமிழக முதல்வர் வந்தால், அது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருப்படும். முதல்வர் வரவில்லை என்றால், அதுவும் கூடுதல் முக்கியத்துவமாககருதப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு இல்லை?

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. ஏற்கனவே இந்த கட்சியில் பழனிசாமி, பன்னீர்செல்வம் என இரு கோஷ்டிகள் உள்ள நிலையில், யாரை அழைப்பது, யாரை விடுவது என்ற குழப்பத்தால், இந்த விஷயத்தில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் ஓரிரு நாட்களில், அ.தி.மு.க.,வுக்கும் அழைப்பு போகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


- நமது டில்லி நிருபர் -



வாசகர் கருத்து (8)

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    ஜி இருபது தானே, இரண்டு ஜி அல்லவே?

  • venugopal s -

    சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளை திறம்பட,திறமையாக நடத்திக் காண்பித்த தமிழக அரசுக்கு இது எம்மாத்திரம்? மத்திய அரசு தேதியையும்,இடத்தையும் மட்டும் சொல்லி விட்டு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம்!

  • sdfsdsfs - chennai,இந்தியா

    மோடி தன் கும்பலை வைத்து ஒரு பிளான் போட்டு மாநில அரசுக்கு அனுப்பலாம் . அதை வேறொரு கும்பலுக்கு அனுப்பி மாநில அரசு பரிசீலிக்கலாம் .

  • sdfsdsfs - chennai,இந்தியா

    மோடியின் பின்னால் செல்வது நரகத்திற்கு செல்வதற்கு சமம்

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    தமிழகத்திலும் G 20 ஆலோசனை கூட்டங்கள் நடத்தும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது. அரசு விருப்பம் தெரிவிக்கவிட்டாலும், அரசு சார்பில்லாத அமைப்புகள் கல்விக்கூடங்கள் முன்வந்து உலகநாடுகள் தமிழகத்தில் கால்பதிக்கச்செய்யவேண்டும். தீயசக்திகள் கையில் தமிழகம் மாட்டிக்கொண்டிருப்பதால், எல்லோரும் அதை புறக்கணிக்கக்கூடாது. தமிழகம் நமது, அதை மீட்டெடுத்து, சங்கமம் செய்யவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement