Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகம் முழுதும் 80 இடங்களில்! ரெய்டு

Tamil News
ADVERTISEMENT
சென்னை :தமிழக அரசின் பொது வினியோக திட்டத்திற்கு உணவு தானியங்களை வினியோகம் செய்யும், 'காமாட்சி அண்டு கோ, பெஸ்ட் டால் மில், அருணாச்சலா இம்பெக்ஸ்' உட்பட, ஐந்து தனியார் நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனையை துவக்கினர். மாநிலம் முழுதும், 80 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை, சில நிறுவனங்கள் வினியோகம் செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக, வருமான வரித் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, உணவுப் பொருட்கள் வினியோகம் செய்யும் நிறுவனங்களில், வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல், திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஐந்து நிறுவனங்கள்



சென்னை தண்டையார்பேட்டையில், 'காமாட்சி அண்டு கோ' நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, உலர் திராட்சை, முந்திரி, பாதாம் மற்றும் வேர்க்கடலை போன்றவற்றை வினியோகம் செய்கிறது. உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி, மொத்த வினியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது.

சென்னை மண்ணடி, தம்பு செட்டி தெருவில் உள்ள, 'அருணாச்சலா இம்பெக்ஸ்' என்ற நிறுவனம், பருப்பு, எண்ணெய் பொருட்கள் உட்பட உணவுப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுஉள்ளது.இந்த நிறுவனங்களின் அலுவலகம், அதிகாரிகள் வீடு என, நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில், வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தண்டையார்பேட்டையில் உள்ள, 'பெஸ்ட் டால்' மில்; சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 'இன்டக்ரேட்டடு சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் உட்பட மொத்தம் ஐந்து நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்கள், உரிமையாளர்கள் வீடுகள், பொருட்கள் வைத்திருக்கும் கிடங்குகள், அலுவலகங்களில் சோதனை நடந்தது.

சென்னை மட்டுமின்றி, காஞ்சிபுரம், மதுரை, கோவை என, தமிழகம் முழுதும், இந்த நிறுவனங்களின் தொடர்பு அலுவலகம், நிர்வாகிகள் வீடுகள் என, மொத்தம் 80 இடங்களில் வருமான வரி சோதனை நேற்று நடந்தது. இந்த சோதனையில், 350க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

வரி ஏய்ப்பு புகார்கள்



இது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசின் பொது வினியோக திட்டத்திற்கு, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உட்பட உணவுப் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள், வருமான வரி ஏய்ப்பு செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வந்தன. அவற்றில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஐந்து நிறுவனங்களுக்கு தொடர்புடைய, 80 இடங்களில் சோதனை துவங்கியது. இந்த சோதனை தொடர்கிறது.

நேற்று நடந்த சோதனையில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்புகள், சோதனை முடிவில் தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.500 கோடி முறைகேடு



தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் செய்ததில், 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பொங்கல் பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு, தரமற்ற பொருட்களை வழங்கியதற்காக, ஆறு நிறுவனங்களுக்கு 3.75 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதில், தற்போது வரி ஏய்ப்பு சோதனை நடக்கும் அருணாச்சலா இன்பெக்ஸ், இன்டக்ரேட்டடு சர்வீஸ் பாயின்ட் ஆகியவை அடங்கும்.



வாசகர் கருத்து (31)

  • dsfsf - chennai,இந்தியா

    பாஜ குண்டர்களுக்கு மால் வெட்ட மறுத்திருப்பார்கள் . அதனால் மோடி கும்பல் தங்கள் குண்டர்கள் அதிகாரத்தை காட்டியுள்ளது

  • சிந்தனை -

    அருமை. சோதனை அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் தூக்குத் தண்டனை தர வேண்டும்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பத்து வருட த தாகம் தீர்ந்த பாடில்லை .

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் கமிஸ்ஸின் பர்சென்ட் லெவல் உயர்ந்து விட்டது சரி கட்ட வேலாண்டிய நிர்பந்தம்.குறுக்கு வழியில் சென்றுள்ளார்கள் . கமிஷின் வாங்கும் பெருச்சாளிகளை உங்களால் பிடிக்க முடியாது .

  • sridhar - Chennai,இந்தியா

    சின்ன திருடர்கள் மேல் பாயும் இவர்கள் ஆட்சி அதிகாரம் மூலம் கோடிகளில் கொள்ளை அடிக்கும் அந்த திருட்டு குடும்பம் மேல் ஏன் நடவடிக்கை இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement