Load Image
Advertisement

பி.பார்ம்., சீட் கிடைத்தும் பீஸ் கட்ட முடியாமல் பரிதவிக்கும் ஏழை மாணவி

  பி.பார்ம்., சீட் கிடைத்தும் பீஸ் கட்ட முடியாமல் பரிதவிக்கும் ஏழை மாணவி
ADVERTISEMENT
திருவள்ளூர்:திருவள்ளூர் வட்டம், பூண்டி ஊராட்சி, கீழ அருந்ததிபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.

கூலி தொழிலாளியான இவருக்கு, மேனகா என்ற மனைவியும், ஐந்து குழந்தைகளும் உள்ளனர்.

இதில், இரண்டாவது மகள் மீனா, 2021ம் ஆண்டு, பூண்டி அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்து, 467 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு அரசு கல்லுாரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த நிலையில், இந்த ஆண்டு, திருத்தணி தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதற்கு, ஆண்டுக்கு 90 ஆயிரம் ரூபாய் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கும் இவரால் அந்த பணத்தை செலுத்த முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் பரிதவித்து வருகிறார்.

இதுகுறித்து மாணவி மீனா கூறியதாவது:

என் தந்தை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியவில்லை. என் தாய், நுாறு நாள் வேலை செய்து, எனக்கும், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு படித்து வரும் தம்பிகள் இருவரையும் படிக்க வைத்து வருகிறார்.எனக்கு கல்வி கற்கும் ஆர்வம் அதிகமாக இருந்தாலும், குடும்ப வறுமை காரணமாக பெற்றோரால் 90 ஆயிரம் ரூபாயை கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. என் உயர்கல்வி கனவை நிறைவேற்ற, உதவி செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்தில் முதல் பட்டதாரி கனவுடன் உள்ள மீனாவிற்கு உதவி செய்ய விரும்புவோர், 9360267864 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.


வாசகர் கருத்து (6)

  • Suryanarayanan -

    குடும்ப கட்டுபாடு அவசியம். ஏழை ஏன்றால் ஒரு குழந்தை போதும்.

  • raja - Cotonou,பெனின்

    கண்டிப்பா நான் உதவ மாட்டேன்... எனக்கு யாரும் இதுபோல விளம்பரம் செய்து உதவலையே... நல்லா கருத்த படிக்கவும் காலில் விழுந்தேன் சொல்லலை... விழாத குறையாக என்றுதான் கூறி இருக்கேன்...சமசீருல படிச்சீங்களா....ஆமா ஆணும் பெண்ணும் சரி சமம் அப்படி சொல்றாங்களே அப்போ அது பொய்யா...

  • Girija - Chennai,இந்தியா

    இதை படிக்கும் வாசகர்கள் குறைந்தபட்சம் ரூ 100 கூகுள் பே போன்றவை வழியாக அனுப்பி அந்த ஏழை மாணவியை படிக்கவைத்து ஊக்கப்படுத்தவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். வசதி உள்ளவர்கள் முழு பொறுப்பை ஏற்றாலும் நல்லது அல்லது கொடுத்தால் பண உதவி செய்தாலும் நல்லது. அதிகார பொறுப்பில் உள்ளவர்கள் TVS, Mahindra Ananth , TATA தலைவர் சந்திரசேகர் போன்றவர்களுக்கு தெரிவித்து உதவி பெற்று கொடுத்தாலும் நன்று.

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    தினமலர் கொடுகலாம். அரசை முறையிடலாம்.

  • raja - Cotonou,பெனின்

    என்னால கூடத்தான் பீசு கட்ட முடியாம பேங்கு மேநேஜரு காலில் விழாத குறையாக விழுந்து கடன் வாங்கி படித்தேன்... ஏன் அது போல படிக்க முடியாதா இவங்களாள.. சும்மா ஆவுண்ண ஏழைன்னு விளம்பர படுத்தி ஓசியில் உதவி செய்ய ஊக்குவிக்க கூடாது.. முடிஞ்சா பேங்கு கடன் வாங்க உதவி செய்ங்க....படிச்சு முடிச்சிட்டு கடனை கட்டட்டும்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement