ADVERTISEMENT
சென்னை : 'ஜி20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்களின் மாநாடு, கோவையில் நடத்தப்படும்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான 'ஜி 20' உச்சி மாநாடு, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்க உள்ளது.
கடந்த 15, 16 தேதிகளில் இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடந்த, ஜி20 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில், ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
உலக வணிகத்தின் 80 சதவீதம், ஜி20 நாடுகளில்தான் நடக்கின்றன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கு, இந்த 20 நாடுகளில் தான் உள்ளது.
ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு, அடுத்த ஆண்டு இறுதியில், இந்தியாவில் நடக்கிறது.

'அதற்கு முன்பு, இந்த 20 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை அமைச்சர்களின் மாநாடு, இந்தியா முழுதும் பல நகரங்களில் நடத்தப்படும்' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அறிவியல் தொழில்நுட்பம், உணவு பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்னணு பண பரிவர்த்தனை, அறிவுசார் சொத்துரிமை என, பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து, 2023-ம் ஆண்டு முழுதும் ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில், 'ஜி20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் மாநாடு, தமிழகத்தின் வணிக நகரான கோவையில் நடத்தப்படும்' என, மத்திய அறிவியல் தொழில்நுட்பம் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 அக்டோபரில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடனான சந்திப்பை, மாமல்லபரத்தில் பிரதமர் மோடி நடத்தினார். அதை தொடர்ந்து, சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியும், இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்தது.
தற்போது, சர்வதேச முக்கித்துவம் வாய்ந்த ஜி20 நாடுகளின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர்கள் மாநாடு, கோவையில் நடக்க இருக்கிறது.
வாசகர் கருத்து (15)
G-20 Summit is not enough to develop India .
செஸ் போட்டியைத் தொடர்ந்து, ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டுக்கு, தமிழகத்தை தேர்வு செய்ததில் மிக்க மகிழ்ச்சி. கோவையில் உள்ள தாமரைக்கு உள்ள செல்வாக்கை வலுப்படுத்த ஒரு முயற்சி என்றும் சொல்லலாம. வாழ்க வளமுடன்
தங்கள் கொள்கைகளை அணைத்து இந்தியமக்களுக்கும் என்று மாற்றிக்கொள்ளாதவரை தமிழ்நாட்டில் வளருவது கஷ்டம்.....
இப்படி மாறி மாறி தூங்க விடாமல் செய்தால் எப்படி ??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவின் குறிகள் எல்லாமே வீணாகப் போனவை தான்.