வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
நாட்டிற்காக உழைப்பேன்
இது தொடர்பாக காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிக்கையில், கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. சஸ்பெண்ட்டுடன் தேசத்திற்காக உழைப்பேன் எனக்கூறியுள்ளார்.
தடை
அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓபிசி அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா இடையே நடந்த தொலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து அடுத்த 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க, ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் கூறப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூரியா சிவா, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (49)
அண்ணாமலைக்கு வந்த சோதனையா, இனி சொந்த கட்சி பிரச்சனையை சமாளிக்கவே நேரம் சரியாகிவிடும் போலிருக்கே....
பிஜேபி கட்சியில் கட்சியின் கொள்கை, கட்சித்தலைவரின் ஆணையை மதித்து நடக்காத உறுப்பினர்களை உடனுக்குடன் அண்ணாமலையின் கடும் நடவடிக்கை எடுத்து கட்சியின் கொள்கையை எப்படி ஜெயலலிதா தனது கட்சியை நிலைநாட்டி வந்தாரோ அதேபோல் செய்துவருகிறார்.
கட்சிக்கு கவர்ச்சி என்ற அளவில், சும்மா கூட்டங்களில் உட்கார்ந்து போஸ் கொடுத்துவிட்டுப் போகாமல் இஷ்டத்துக்கு உளறிக் கொட்டினால் இப்படித்தான்
தமிழகத்தில் தொண்டர்கள் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள கட்சிகள் காங்கிரஸும் பாஜகவும் தான்!
நடிகை காயத்ரி ரகுராம் எந்த பிரிவின் மாநில தலைவர் பதவியில் இருந்தாலும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி கூறும்போது கொஞ்சம் நாவடக்கம் தேவை. கட்சித்தலைவரை அண்ணாமலை அண்ணாமலை என்றே கூறுவது எல்லோருக்குமே முகம் சுளிக்க வைக்கிறது. எதிர்கட்சிகளையாவது பார்த்து மரியாதை என்பது சற்றே தெரிந்துகொள்ள வேண்டும். தலைவர் அண்ணாமலை அல்லது அன்னான் அண்ணாமலை அல்லது தமிழக பிரசிடெண்டு என்று பல வார்த்தைகளில் ஒன்றையாவது பயன் படுத்தினால் நாகரிகமாகும் இல்லையேல் இது கட்சியையே பெரிதும் பாதிக்கும். முதலில் மற்றர்களுக்கு மரியாதை தருவது என்ற பழக்கம் இதை இனிமேலாவது பின்பற்றுவாரா?