Load Image
Advertisement

பெருகும் வரவேற்பு; பதறும் தி.மு.க.,

 பெருகும் வரவேற்பு; பதறும் தி.மு.க.,
ADVERTISEMENT
சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்திற்கு, தமிழக மக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பு, தி.மு.க.,வினரை பதற்றமடையச் செய்துள்ளது.

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான தொன்மையான ஆன்மிக, கலாசார பிணைப்பை மீட்டெடுக்கவும், மக்களிடம் ஆன்மிக, தேசிய உணர்வை வளர்க்கவும், இம்மாதம் 17 முதல் டிசம்பர் 16 வரை, ஒரு மாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சிக்கு, மத்திய பா.ஜ., அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர்கள், மாணவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கிராம கோவில் பூஜாரிகள் என, தமிழகத்தை சேர்ந்த 2,592 பேர் பங்கேற்கின்றனர்.

காசி தமிழ்ச் சங்கமத்திற்காகச் சென்ற முதல் குழுவினர், காசி மட்டுமல்லாது, உ.பி.,யில் உள்ள ஆன்மிக, கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.
Latest Tamil News
காசி தமிழ்ச் சங்கமம் துவக்க விழாவில், தமிழர்களின் உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து, பிரதமர் மோடி பங்கேற்றதும், தமிழகத்திற்கும் -காசிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பேசியதும், அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழ் மடாதிபதிகளுடன், பிரதமர் மோடி காட்டிய நெருக்கமும், தி.மு.க.,வை கலக்கமடைய செய்துள்ளது. காசி தமிழ்ச் சங்கமம் வாயிலாக, தமிழகத்தின் ஆன்மிக, கலாசாரம் குறித்து இந்தியா முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படி, காசி தமிழ்ச் சங்கமத்திற்கு பெருகி வரும் வரவேற்பு, தி.மு.க.,வை பதற்றமடைய செய்துள்ளது. இதனால், தி.மு.க.,வினரும், அக்கட்சியின் ஆதரவாளர்களும், அதை விமர்சித்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் தி.மு.க., ஆதரவாளர்கள், 'தமிழகத்தில் காலுான்ற பா.ஜ., செய்யும் தந்திரமே காசி தமிழ்ச் சங்கமம். மத்திய அரசு நிதியில் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலினை ஏன் அழைக்கவில்லை?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்.

தி.மு.க., நடத்தும் ஊடகங்களில், காசி தமிழ்ச் சங்கமத்தை விமர்சித்து, தினமும் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. துவக்க விழாவில் பங்கேற்ற இளையராஜாவையும் விமர்சித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள மத்திய அரசு முன்னாள் செயலரும், எழுத்தாளருமான பி.ஏ.கிருஷ்ணன், 'திராவிட இயக்கத்தில் இருக்கும் சிலருக்கும், கலப்பட கம்யூனிஸ்ட்களுக்கும், காசி தமிழ்ச் சங்கமம் எரிச்சலை தந்துள்ளது.

'ஆனாலும், அது தமிழைப் பற்றி இந்தியா முழுதும் பேச வைத்திருக்கிறது என்பதே உண்மை' என கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (153)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இருக்காதா பின்ன ,ஏற்கனவே இதுவரை நல்லா கல்லா கட்டி தமிழை வெச்சு வியாபாரம் பண்ணவங்களுக்கு போட்டி வந்தா வியாபாரம் போணியாகுமா ?? நிச்சயம் படுத்துக்கும் .

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தமிழும் ஆன்மீகமும், தெய்வீக இலக்கியங்களும் பின்னிப்பிணைந்தவை. திராவிடத்திருடர்கள் தமிழைத்திருடு தெய்வீகத்தை நீக்கி அதை அவர்கள் உருவாக்கிய மொழி போல உருட்டுவது அபத்தம். ஆண்டாளையும், ஆள்வார்களையும், நாயன்மார்களையும் நீக்கினால் அந்தத்தமிழ் திராவிடத்தமிழ் போலத்தான் இருக்கும். திராவிட தெலுங்கின் இலக்கணமே தஞ்சாவூரில் எழுதியது... தமிழுக்கு உரிமை கொண்டாடுவதை திராவிடர்கள் கைவிட வேண்டும். மதசார்பற்ற தமிழ் என்று ஒன்றே கிடையாது...

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    "இந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் ஸ்டாலினை ஏன் அழைக்கவில்லை?' என, கேள்வி எழுப்பியுள்ளனர்...." இயல், இசை, நாடகம் ஆன்மிகம் எதிலாவது தடம் பதித்திருக்க வேண்டும் .... ஆக ஆக நம்மவர் தடம் பதித்தது ..... இல் ....

  • kannan - Bangalore,இந்தியா

    தமிழகம் முழுவதும் இருந்து எல்லா இடங்களிலும் வரவேற்பு

  • hari -

    தமிழ் தமிழ் என்ன கூவிக்கொண்டு தமிழை ஒழுங்காக படிக்கக்கூட தெரியாத ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement