தமிழக காங்கிரசில், மாநில தலைவர் அழகிரி ஆதரவாளர்களுக்கும், பொருளாளர் ரூபி மனோகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே, கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.
இவர்களில் திருநாவுக்கரசரை தவிர, மற்ற நால்வரும் டில்லி சென்று, கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அவர்கள் அனைவரும் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.
அப்போது ஒருவர் மட்டும், 'மாநில தலைவராக ஜோதிமணியை நியமித்தால், நான் ஆதரவு தருவேன்' என, கார்கேவிடம் கூறியிருக்கிறார்.
உடனே, மூத்த தலைவர் ஒருவர், 'இந்த விஷயத்தை பேசுவதற்கு நாம் டில்லி வரவில்லை. நாம் சத்தியமூர்த்தி பவனில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, யார் மீது தவறு இருக்கிறது என்பதை சொல்ல வந்தோம். தலைவர் பதவியை பேச வேண்டிய அவசியமில்லை' என, கோபத்தில் கொந்தளித்துள்ளார்.
அவரை மற்ற தலைவர்கள் சமரசப்படுத்தினர். ஆனால், அந்த மூத்த தலைவர் சமாதானம் அடையாமல், கார்கே வீட்டில் இருந்து பாதியில் போய் விட்டார்.

இந்நிலையில் நேற்று காலையில், அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதன், டில்லியில் கார்கேவை சந்தித்து பேசினார். அவருடன் ரூபி மனோகரனும் இருந்தார்.
'கடந்த 42 ஆண்டுகளாக, இளையபெருமாளுக்கு பின், தலித் சமுதாயத்திற்கு தலைவர் பதவி வழங்கவில்லை. அந்த சமூகத்தைச் சேர்ந்த எனக்கு, தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, கார்கேவிடம் விஸ்வநாதன் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தகுதியானவர் இல்லையா?
சென்னை மாநகராட்சியில் காங்கிரஸ் சார்பில், 14 கவுன்சிலர்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிந்து, ஒன்பது மாதங்களாகியுள்ள நிலையில், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் பதவிக்கு, தகுதி படைத்த ஒரு கவுன்சிலரை தேர்வு செய்யாமல் இழுத்தடிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 'மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், 63வது வார்டு கவுன்சிலருமான சிவராஜசேகரனுக்கு, காங்கிரஸ் குழு தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, இதயத்துல்லா, நவாஸ், சுமதி அன்பரசு உள்ளிட்ட நிர்வாகிகள், அழகிரியிடம் மனு அளித்துள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (32)
எத்தனை பேருக்கு தெரியும்
கடைசியில் இந்த காங்கிரஸ் தலைவர் அசிங்கப் பட்டுத்தான் தன் தலைவர் பதவியை இழக்கப் போகிறார்.
மொத்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் இவர்களின் இந்த கோஷ்டி பூசல் காரணமாக விரைவில் தமிழ்நாட்டில் லெட்டர் பேட் கட்சி ஆகி விடும் என்று தெளிவாக தெரிகிறது
அழகிரி வயிற்றில் புளி கரைகக்கிறார்கள்.. பார்வையிலேயே தெரிகிறது. தலைவர் பதவி கோவிந்தா. .
படத்தை பார்த்தா என்னமோ ஏதோன்னு தெரியுதே