தமிழக மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புதுடில்லி தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய தமிழக மின்துறை ஒழுங்குமுறை கமிஷனின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
தமிழகத்தில் மின்சார கட்டணங்களை உயர்த்தி தமிழக மின்துறை ஒழுங்குமுறை கமிஷன் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக நுாற்பாலைகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக மின்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, கட்டணம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட கமிஷனுக்கு அதிகாரமில்லை என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தமிழக அரசு, தமிழக மின்துறை ஒழுங்குமுறை கமிஷன் மேல்முறையீடு செய்தன.
மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முந்தைய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக நுாற்பாலைகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், அபய் எஸ்.ஒகா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக மின்துறை ஒழுங்குமுறை கமிஷனில் சட்ட உறுப்பினரை நியமிக்கும் பணி, முறைப்படி துவங்கி இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட உறுப்பினர் நியமனத்துக்கும், மின் கட்டண உயர்வு தொடர்பான உத்தரவுக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நுாற்பாலைகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!