Load Image
Advertisement

கட்சியே குப்பையா கிடக்குது என்ற அமைச்சருக்கு முதல்வர் டோஸ்!

Tamil News
ADVERTISEMENT
'கட்சியே குப்பையாக இருக்கிறது' என, நிதி அமைச்சர் தியாகராஜன் பேசிய பேச்சுக்கு, மதுரை மாவட்ட நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

'வாய் துடுக்கு விமர்சனத்தை நிறுத்தவில்லை என்றால், நிதித் துறை பறிக்கப்படும்' என, அமைச்சருக்கு முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 'கூட்டுறவுத் துறையில் கடத்தல்கள் அதிகரித்துள்ளன. துறை செயல்பாட்டில் திருப்தி இல்லை' என, சமீபத்தில் தியாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.
தி.மு.க., ஆட்சியை குறை சொல்வது போல், அவரது பேச்சு உள்ளதால், 'முதல்வர் கையில் கட்சி கட்டுப்பாடு இல்லையா?' என, சமூக வலைதளங்களில் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.இதற்கிடையில், மதுரை மத்திய தொகுதியின் வட்ட செயலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தியாகராஜன் வீட்டில் நடந்தது.


இந்த கூட்டத்தில், 'பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், என்னை சந்திக்க காத்திருக்கின்றனர். கட்சியால் எனக்கு எந்த பலனும் இல்லை; கட்சி குப்பையாக கிடக்கிறது' என, தியாகராஜன் விரக்தியில் பேசியுள்ளார்.உடனே மூத்த வட்ட செயலர் ஒருவர், 'கட்சியை வைத்து தான் நீங்கள் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை பெற்றுள்ளீர்கள். பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனை, உங்களால் சந்தித்து பேச முடிகிறது. எனவே, நீங்கள் கட்சியை பற்றி தவறாக பேசாதீர்கள்' என, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உடனே, மற்ற நிர்வாகிகளும் மதுரை மாநகராட்சியில் நடக்கிற தவறுகளை சுட்டிக்காட்டினர். மதுரை மேயர் கணவர் மீது, மேலமாசியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், சரமாரியாக குற்றம் சாட்டினார்.

இதனால், அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டதும், தியாகராஜன் கோபமாக எழுந்து, வீட்டிற்குள் சென்று விட்டார். கட்சி குப்பையாக கிடக்கிறது என்று அவர் பேசியதும், கூட்டுறவுத் துறையை விமர்சித்த விவகாரமும், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இனிமேல், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் தியாகராஜன் பேசினால், அவரிடமிருந்து நிதித் துறை பறிக்கப்படும் என எச்சரிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் 'டோஸ்' விடுத்துள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தொகுதி பணி முடக்கமா?



மதுரை மாநகர் மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான தளபதியின் மதுரை வடக்கு தொகுதியில் ஓடுகிற பந்தல்குடி கால்வாய் சிதிலமடைந்து கிடக்கிறது. இதை சீரமைக்கும் பணி, அமைச்சர் துரைமுருகன் பரிந்துரையில், 75 கோடி ரூபாய் செலவில் துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இத்திட்டம் நிறைவேறினால், தளபதிக்கு பெயர் வந்து விடும் என்பதால், நிதிநிலை பற்றாக்குறையை காரணம் காட்டி, அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், தியாகராஜன் தரப்பில் இழுத்தடிப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்தும், முதல்வர் காதுக்கு புகார் சென்றுள்ளது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (30)

 • TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ

  இருக்கும் ஒரு தமிழ் அமைச்சரையும் மாற்றி விட்டால் முழு திராவிட மாடல் ஆகிவிடும்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  உண்மையை சொல்லவே கூடாதா

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இப்படி உண்மையை (கட்சி ரகசியத்தை) சொன்னால் தலைவருக்கு கோபம் வராதா?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  ஒருத்தர் செரிபிகேட் கொடுத்தாரே ஐந்து லட்சம் கோடி வைத்திருப்பவன் திருடமாட்டான் என்று .தேன் எடுத்தவன் புறங்கைய்ய நக்க மாட்டானா?

 • M Ramachandran - Chennai,இந்தியா

  எந்த தீ மு க்க காரனும் இப்படி தில்லாக பேசியதில்லை. சரித்திரம் படைத்தது விட்டார் ராயல் பேமிலி என்றால் ராயல் பேமிலி ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement