மகளிர் வாலிபால் போட்டி மெட்ராஸ் கல்லுாரி அபாரம்
சென்னை,:அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, மூன்றாவது மண்டலத்திற்கான மகளிர் வாலிபால் போட்டி, வண்டலுார் அருகிலுள்ள ரத்தின மங்கலம் தாகூர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
முதல் போட்டியில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, தாகூர் பொறியியல் கல்லுாரி அணியை, 2 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.
இரண்டாவது போட்டியில், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரி, நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் கல்லுாரி அணியை, 2 - 0 புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில், ஆதி பொறியியல் கல்லுாரி, பெரி தொழில்நுட்பக் கல்லுாரி அணியை, 2 - 0 புள்ளிக்கணக்கில் சாய்த்தது.
தொடர்ந்து நடந்த முதல் அரையிறுதியில், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி 2 - 0 புள்ளிக்கணக்கில், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி 2 - 0 புள்ளி கணக்கில் ஆதி பொறியியல் கல்லுாரி அணியை தோற்கடித்து, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில், 2 - 0 புள்ளிக்கணக்கில், மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லுாரி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!