ADVERTISEMENT
லக்னோ: விருப்பத்திற்கு மாறாக வேறு சமூகத்தை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் தாங்காத தந்தை பெற்ற மகளை சுட்டுக்கொன்று சூட்கேசில் வைத்து வீசிய சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பகுதியில் கடந்த 18-ம் தேதி அனாதையாக கிடந்த சூட்கேஸ் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மதுரா போலீசார் சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்த போது 22 வயது இளம் பெண் சடலம் இருந்துள்ளதும், தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததற்கான காயம் இருந்தது.
இது குறித்து நடந்த விசாரணையில், பிணமாக கிடந்த பெண் ஆயுஷி சவுத்ரி ,22 என்பதும் இவரது தந்தை நித்தேஷ் சவுத்ரி என்பதும் தெரியவந்தது. நித்தேஷ் சவுத்ரி குடும்பத்திருடன் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் பலூனி என்ற பகுதியில் வசித்து வந்த போது மகள் திடீரென காணமால் போனதும் , பின்னர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.
மகளின் இந்த செயலால் ஆத்திரமடைந்த நித்தேஷ் சவுத்ரி கடந்த 18-ம் தேதி மகளின் நெற்றில் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொன்றுவிட்டு பிணத்தை சூட்கேசில் வைத்து யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் வீசி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்திற்கு தனது மனைவியையும் பயன்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. நித்தேஷ் சவுத்ரி, அவரது மனைவி ஆகிய இருவரையும் மதுரா போலீசார் கைது செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வாசகர் கருத்து (22)
சீராட்டி வளர்த்து விட்டு கொலை செய்ய எப்படித்தான் மனது வருகிறதோ... இந்தப்பாவத்தை கழிக்க இன்னும் எத்தனையோ பிறவிகளை எடுக்க வேண்டும்...
யோகிஜிக்கு இது தான் வேலையா?
மகள் காதல் திருமணம் செய்ததால் குடும்ப கவுரவம் கெட்டுவிட்டது என்று அப்பன் கொலைகாரனாகவே மாறிவிட்டான் . இப்போ குடும்ப கவுரவம் என்னாச்சு. காதல் திருமணங்கள் கடந்த அறுபது வருடங்களில் சகஜம் ஆகி விட்டது . பெற்றவர்கள் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும்.
இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தால் சரக்கு மிடுக்கு உள்ள அவள் கணவனே அவளை கொலை செய்திருப்பான். தந்தைக்கு வேலையும் மிச்சமாயிருக்கும் சிறைக்கு போக வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
//நித்தேஷ் சவுத்ரி குடும்பத்திருடன் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் பலூனி என்ற பகுதியில் வசித்து...//.குடும்பத்திருடன்..???