ADVERTISEMENT
சென்னை--உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடக்கும், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து நேற்று, 280 பேர் கொண்ட இரண்டாவது குழு, பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, 'பாட்னா எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் மேற்கொண்டது. அக்குழுவை, பா.ஜ.,வினர் வழியனுப்பி வைத்தனர்.
பழங்காலத்தில் இருந்தே, உத்தர பிரதேசத்தில் உள்ள, காசி என்ற வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையே, கலை, கலாசாரம், ஆன்மிக ரீதியாக நெருக்கடி தொடர்பு உள்ளது.
இந்த உறவு குறித்து, இரு மாநில மக்கள் அறிந்து கொள்ளவும், இரு மாநில கலை, கலைசாரம், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், மத்திய அரசு, 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை, பிரதமர் மோடி நேற்று முன்தினம், வாரணாசியில் துவக்கி வைத்தார். இதற்காக, தமிழகத்தில் இருந்து ஒரு குழுவினர், காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வில் பங்கேற்க, 280 பேர் கொண்ட தமிழக குழு, நேற்று மதியம், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, 'பாட்னா எக்ஸ்பிரஸ்' ரயிலில் புறப்பட்டு சென்றது.
பா.ஜ., மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர், பிஸ்கட், குடிநீர் வழங்கி, அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
பின், கரு.நாகராஜன் கூறியதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாயிலாக, தமிழர்களின் புகழை உலகம் அறியச் செய்வதில், பிரதமர் மோடி, முன்னோடியாக இருக்கிறார். அந்த வகையில், உலகம் முழுதும் வாழும், 10 கோடி தமிழர்களின் நெஞ்சம் நிறைந்துள்ளது.
தமிழர்களின் பெருமையை போற்றி வளர்ப்பது, 130 கோடி இந்தியர்களின் கடமை; தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், தொழில் மேம்பாடு ஆகியவற்றை, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி துவக்க விழாவில், பிரதமர் கூறியிருந்தார்.
அத்தகைய பெருமை வாய்ந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு, 2,800 பேர் தமிழகத்தில் இருந்து செல்கின்றனர். இன்று, இரண்டாவது ரயிலில், 83 மாணவர்கள் உட்பட, 280 பேர் பயணிக்கின்றனர். மேலும், பல கல்லுாரிகளில் இருந்து, வாரணாசி செல்ல மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (7)
வசதி படைத்தவர்களையெல்லாம் இலவசமாக அரசு செலவில் அழைத்துச் சென்று அவர்களுக்கு சேவை செய்து அவர்கள் மூலம் தமிழகத்தில் வாக்கு வங்கியை விரிவுபடுத்தவே இந்த நாடகமேயன்றி தமிழர்களின் புகழை உலகம் அறியச் செய்வதற்காக என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை.இவர்களுக்கு போட்டியாக மாநில அரசாங்கத்தில் உள்ளவர்களும் இரங்கி பத்து நாள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
என்ன நாடகம் செய்தாலும் தாமரை மலராது தமிழகத்தில்.
Waste of money
புதிய தமிழ் எழுச்சி நாயகர் பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். வாழ்க பல்லாண்டுகள், வளர்க அவர் திருத்தொண்டு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
காசி ராமேஸ்வரத்திற்கு ஒரு தொடர்பு உண்டு காசிக்கு செல்ல விரும்பும் இந்துக்கள் ராமேஸ்வரம் சென்று உங்களுடைய ராமநாத சுவாமியை தரிசனம் செய்து அங்கு உள்ள தீர்த்தமாடி அந்த தீர்த்தத்தை காசி விஸ்வநாதருக்கு சென்று அபிஷேகம் செய்துவிட்டு அதன்பின்பு ராசி விஸ்வநாதன் தாங்கள் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள தீர்த்தத்தை காசி தீர்த்தத்தை கொண்டு வந்து இங்கு உள்ள இராமநாதசுவாமி அதாவது ராமேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானை அபிஷேகம் செய்துவிட்டு அதன் பின்பு தான் தங்கள் தங்கள் இல்லத்திற்கு வர வேண்டும் அதன்பின்பு இந்துக்கள் அனைவரும் இரண்டு புண்ணியஸ்தலத்தில் உள்ள சிவனை தரிசனம் முடித்த பின்பு மதுரையில் உள்ள அழகர் கோயில் மலைக்கு சென்று அங்கு உள்ள இரண்டாம் படி அவரை வணங்கி விட்டு பெருமாளை தரிசனம் செய்துவிட்டு தங்கள் இல்லத்திற்கு வந்தால் தான் நீங்கள் புனித யாத்திரை சென்று வந்ததற்கான முழு பலன் உங்களுக்கு கிடைக்கும் என்று உங்களுடைய ஜோதிடர்களும் உங்களுடைய மூதாதையர்களும் சொல்லி வைத்த விஷயம் இதுதான் தெரியாத இந்துக்களுக்கு இதை தெரியப்படுத்துங்கள்