ADVERTISEMENT
புதுடில்லி-காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, ௩௫ துண்டுகளாக வெட்டப்பட்ட, ஷ்ரத்தாவின் மண்டை ஓடு மற்றும் எலும்புகளை, புதுடில்லி போலீசார் நேற்று கண்டுபிடித்து மரபணு சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா ஒன்றாக பணியாற்றி வந்தனர். இவர்களது காதலுக்கு ஷ்ரத்தாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருவரும் புதுடில்லிக்கு சென்று தனியாக வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மே மாதம், ௧௮ம் தேதியே ஷ்ரத்தா, அவரது காதலனால் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
அவரது உடலை, ௩௫ துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியுள்ளதும் தெரியவந்தது. அப்தாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை போலீசார் கடந்த மூன்று நாட்களாக தேடி வருகின்றனர். நேற்று மண்டை ஓடு, தனியாக வெட்டி எடுக்கப்பட்ட தாடை எலும்பு உள்ளிட்ட ௧௦ எலும்பு துண்டுகளை, போலீசார் கண்டுபிடித்தனர்.
இவற்றை, டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, போலீசார் எட்டு முதல் ௧௦ எலும்புத் துண்டுகளை கண்டுபிடித்து, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குருகிராமில், அப்தாப் வேலை பார்த்து வந்த இடத்தில் இருந்து, பெரிய பிளாஸ்டிக் பையை போலீசார் கைப்பற்றினர். நேற்று முன் தினம், அப்தாப் குடியிருந்த வீட்டில் இருந்து கூர்மையான கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
நேற்றும் அப்தாப் குடியிருப்புக்குச் சென்று சோதனை நடத்திய போலீசார், இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகள் நிறைய, ஷ்ரத்தாவின் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்தனர்.

வாசகர் கருத்து (2)
இந்து பெண்களை சீரழிக்கும் கூட்டம் தன் வேலையை தொடரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
A lesson to unnatural pleasure seeking Hindu girls.