Load Image
Advertisement

வீராங்கனை பிரியா மரண விவகாரம் உருமாறுகிறது; கைது செய்தால் போராட்டம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை : கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரண விவகாரம் உருமாற்றம் பெற்று போராட்டமாக வெடிக்க உள்ளது. இது தொடர்பான வழக்கில் சக டாக்டர்களை கைது செய்தால் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் குதிக்கப் போவதாக அரசு மருத்துவர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார்; அவரது மகள் பிரியா. கல்லுாரி மாணவியும் கால்பந்தாட்ட வீராங்கனையுமான பிரியாவுக்கு வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியதால் அவதிப்பட்டார். கொளத்துார் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நவ.,7ம் தேதி ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அவரது கணுக்காலில் இருந்து ஜவ்வு எடுக்கப்பட்டு மூட்டு பகுதியில் பொருத்தப்பட்டது.

அப்போது அதிகளவில் ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் கால் பகுதியில் சுருக்கு கட்டு போட்டுள்ளனர். இதனால் வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டு ரத்த நாளங்களும் பாதிக்கப்பட்டன.

மறுநாள் நவ., 8ல் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவின் வலது கால் அவரது உயிரை காப்பாற்றும் வகையில் அகற்றப்பட்டது.

Latest Tamil News
ஆனாலும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டதால் சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

நவ.,15 காலை 7:15 மணியளவில் பிரியா உயிரிழந்தார். இதில் கவனக்குறைவாக பணியாற்றிய டாக்டர்கள் பால் ராம்சங்கர், சோமசுந்தர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட டாக்டர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

'டாக்டர்களை கைது செய்தால் முன் அறிவிப்பின்றி பணிகளை புறக்கணிப்போம்' என அரசு டாக்டர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் அறிக்கை:

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின்போது ஏற்பட்ட இறப்பில் அந்த துறையின் மூத்த 'ஸ்பெஷலிஸ்ட்' கருத்தை போலீஸ் பெற வேண்டும்.

அவ்வாறு மூத்த ஸ்பெஷலிஸ்ட் தரப்பில் மரணத்தில் மருத்துவ சிகிச்சையின்போது கடும் கவனக்குறைவு உள்ளது என்றால் மட்டுமே போலீசார் '304 ஏ' பிரிவில் வழக்கு தொடர வேண்டும்.

இப்பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என கூறுகிறது.

இந்த மரணத்தில் 'கிரிமினல்' குற்றம் இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை அளிக்கவில்லை. சிவில் குற்றச்சாட்டாக கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்துள்ளது.

எனவே உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி கிரிமினல் வழக்கில் டாக்டர்களை சேர்த்து அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் டாக்டர்களை கொலைக் குற்றவாளி போல முன்ஜாமின் மறுத்து உடனடியாக சரணடையக் கூறி இருப்பது அனைத்து டாக்டர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

இதில் கவன குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே டாக்டர்கள் மீது எடுக்கப்பட வேண்டும். டாக்டரின் பெயர்களையோ, புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல வெளியிட வேண்டாம்.

நோயாளிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டும் அதன் பிந்தைய கவனக்குறைவில் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் பதியப்பட்ட '304 ஏ' பிரிவு மாற்றப்பட வேண்டும். இதையும் மீறி டாக்டர்கள் கைது செய்யப்பட்டால் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளோம்.

இதற்கு ஆதரவு அளிக்கும்படி அரசு நர்ஸ்கள் சங்கம், இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல் அரசு டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கமும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் முன் அறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அச்சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் செயலர் ரவீந்திரநாத் அறிக்கை:

கவனக் குறைவு உள்ளிட்ட அனைத்து சம்பந்தமாகவும் விரிவான முழுமையான விசாரணை நடுநிலையோடு நடத்தப்பட வேண்டும்.

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும். உடற்கூறு ஆய்வு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

முழுமையான உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டும். அதன் வாயிலாக இதுபோன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.

அரசு டாக்டர்களை சட்டத்துக்கு புறம்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக கைது செய்யும் முயற்சியை கைவிட வேண்டும். டாக்டர்கள் விரோத போக்கை அரசு கைவிட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சைகள் கிடைப்பதை பாதிக்கும் வகையிலும், கவன குறைவுகள் ஏற்படும் வகையிலும் அரசு மருத்துவத் துறையில் கட்டமைப்பு குறைபாடுகள் ஊழியர்கள் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.

இவற்றை எல்லாம் போக்காமல் கவனக்குறைவுகளால் பாதிப்புகள் ஏற்பட்ட பின் அரசு மருத்துவமனைகளின் குறைபாட்டை மறைக்க டாக்டர்களை, ஊழியர்களை பலிகடா ஆக்குவது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

கைது செய்ய தனிப்படை அமைக்கப்படவில்லை

மாணவி பிரியா மரணத்திற்கு காரணமான டாக்டர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது.இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் கூறியதாவது: மாணவி பிரியா மரணம் குறித்து மருத்துவ கல்வி இயக்கம் அளித்த அறிக்கையில் சிலவற்றிற்கு விளக்கம் கேட்டுள்ளோம். அந்த விளக்கத்திற்கு பின்தான் டாக்டர்கள் மீதான நடவடிக்கை முடிவு செய்யப்படும். தற்போது வரை தனிப்படைகள் அமைக்கப்படவில்லை.சம்பந்தப்பட்ட டாக்டர்களுக்கு முதலில் 'சம்மன்' அனுப்பப்பட்டு அதன்பின் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து (27)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ராஜிவ் கொலையாளிகளுக்கே விடுதலை கொடுத்த மாநிலம் பிரியாவின் கொலைக்கு என்ன கண்டுக்கவா போறாங்க ?

  • raja - Cotonou,பெனின்

    முதலில் தார்மீக பொறுப்பேற்று மாசு பதவி விலக வேண்டும்

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    For every procedure ( operation), there is a SOP ( Standing operative procedure). Whether the the pre operative, theatre procedure, post operative procedure ( both immediately after the operation, when the patient may be under anaesthesia ( full)and kept in ante-operations theatre and subsequently in either in ICU or in ward are followed by respective personnel should be established. These SOP has to be meticulously followed and it is the primary duty of the Surgeon and anasthatiest should ensure this.

  • raja - Madurai,இந்தியா

    என்னடா இது, விடியலுக்கு வந்த சோதனை...

  • aaruthirumalai -

    கவனக்குறைவுக்கு தண்டனை உண்டா இல்லையா.....ஏழ்மையான மக்களுக்கு இது போல் பாதிப்பு ஏற்பட்டால் விதி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement