Load Image
Advertisement

பரிதாபத்தில் காங்கிரஸ்

புதுடில்லி: மத்திய அரசு அறிவித்த, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதை காங்கிரஸ் உடனே வரவேற்றது. 'இந்த திட்டத்தை முதலில் கொண்டு வர முயற்சித்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தான்' என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
Latest Tamil News


இதையடுத்து, 'அந்த சமயத்தில் மன்மோகன் சிங் அரசில் தி.மு.க.,வும் இருந்தது. அப்போது அக்கட்சி ஏன் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை' என புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்படுகிறது.

ஆனால், காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க., இந்த இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்ததும், காங்., மூத்த தலைவர் சிதம்பரம், ஜெய்ராமிற்கு போன் செய்து அடக்கி வாசியுங்கள் என்றார்; காங்கிரசும் இந்த விஷயத்தை அடக்கி வாசித்தது.
Latest Tamil News

'தி.மு.க., தந்த இந்த நெருக்கடியால், இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்., பின்வாங்கியிருப்பது, வட மாநிலங்களில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்' என்கின்றனர், வட மாநில காங்கிரஸ் தலைவர்கள்.

இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால், ஜாட், மராட்டியர் மற்றும் கர்நாடகத்தில் உள்ள லிங்காயத் இனத்தவர் பயனடைவர். தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள மாறுபட்ட நிலையால், இவர்களின் ஓட்டுகள் கிடைக்காது என வருத்தப்படுகின்றனர் காங்., தலைவர்கள்.


வாசகர் கருத்து (20)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    பாலையா காங்கரஸ் கட்டி காத்த அந்த தன மானம் காற்றில் பறக்கிறது.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    ப சி ஒரு சந்தர்ப்ப வாத திருடன். அவனை நம்பி வடக்கே கான்க்ரசைய குழி தண்டி புதைய்க்க பார்க்கிறார்கள் .என்றுமெ தமிழ்நாட்டிற்க்கு ஒரு துரும்பய் கூட எடுத்து போட்டதில்லை ( ஆனால தாய் மாமனை பாசத்தால் அவருக்கு உதவி செய்தது தான் தமிழ்நாட்டில் செய்த்த சாதனை) .

  • DVRR - Kolkata,இந்தியா

    10% இட ஒதுக்கீடு?? யாருக்கு??? பொருளாதாரத்தில் பின் தங்கியவர்ளுக்கு??? 69% - 75% இட ஒதுக்கீடு யாருக்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு அனால் ஒரு வித்தியாசம் இவர்கள் யார் கீழ் ஜாதியினர்?? இதன் உண்மையான பின்னணி என்ன?? கீழ் ஜாதியினர் என்பவர் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளனர் என்று இந்த ஒதுக்கீடு 60 வருடம் முன்னாடி ஆரம்பித்தது?? அப்போ அது சரி இப்போ இது தவறா??? இப்போ என்ன நடக்கின்றது?? கீழ் ஜாதியினர் என்று ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் இன்று வரை அப்படியே தான் உள்ளனர். ஏதோ இப்படி அப்படி செய்து இதில் சிலர் ஐ ஏ எஸ் ஐ பி எஸ் என்ஜினீயர் டாக்டர் வக்கீல் அரசியல் வியாதி ஆனவர்கள் தான் இப்போது இந்த கீழ் ஜாதியினர் நாங்கள் என்று சொல்லி இவர்கள் தான் அதை அபரிமிதமாக உபயோகிக்கின்றனர்? ஆனால் அவர்கள் கீழ் ஜாதி???இது தான் இங்கு வேடிக்கை

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இங்கே தமிழகத்தில் கிடைக்கப்போகும் இரண்டு அல்லது மூன்று சீட் பிச்சைக்காக வட இந்திய மாநிலங்களில் பெறப்போகும் வெற்றியை காங்கிரஸ் தாரைவார்க்கிறது....என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்?

  • சிந்தனை -

    திருடர் கூட்டம் காங்கிரஸ்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்