திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் போது தடகள போட்டியில் பயிற்சி பெற, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்துக்கு வந்தார். பள்ளி, வட்டார, மண்டல அளவிலான போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று பாராட்டுக்களை பெற்றார்.
காலை, மாலை மைதானமே கதியென கிடந்து, கடும் பயிற்சி மேற்கொண்டார். தொடர் பயிற்சி காரணமாக மாநில போட்டிகளில் தொடர் வெற்றிகளை இவரால் பெற முடிந்தது. பள்ளிகல்வித்துறை சார்பில், நடத்தப்பட்ட மாநில தடகள போட்டியில், 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.
சென்னையில் நடந்த மாநில போட்டியில் வென்று, ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்த தேசிய போட்டியில் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில், முதல் மாணவியாக வந்து, சாதித்தார்.
இவரது ஆர்வம் மற்றும் தடகள செயல்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்க உதவித்தொகையாக, 1.50 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்கியது. அசாம் மாநிலம், கவுகாத்தியில் நவ., 11 முதல், 15 வரை நடந்த தேசிய தடகள போட்டியில் பங்கேற்றார். இம்முறை, 4x100 மீ., தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கமும், 100 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில், மூன்றாமிடம் பெற்று வெண்கலமும் வென்றார்.
மாவட்ட தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி கூறுகையில், ''14 முதல், 19 வரை ஆர்வமுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான தடகள பயிற்சி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படுகிறது. வைஷாலி தடைதாண்டும் ஓட்டத்தில் ஆர்வமுடன் இருந்தார்; இடைவிடாது பயிற்சியும் மேற்கொண்டார். மாநில போட்டி என்றால் முதலில் முன் நிற்பார். அதனால், அவருக்கு தேசிய போட்டிக்கு வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்று காட்டியுள்ளார்'' என்றார்.
உடல் நலன் முக்கியம்
மாணவி வைஷாலி சொல்வதென்ன...
தடகள போட்டி பயிற்சியின் போது, தடைதாண்டும் ஓட்டத்தில் பங்கேற்க ஆர்வம் ஏற்பட்டது. 100 மீ., இலக்கை அடைய, பத்து தடைகளை தாண்ட வேண்டும். ஒரு நொடி கூட கவனம் சிதறக்கூடாது. சமயோசிதமாக செயல்பட்டால், இலக்கை எளிதில் அடையலாம் என்பதால், தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்க துவங்கினேன்.
நம் ஊருக்கும், பிற மாநிலத்தில் விளையாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. இரண்டு நாள் பயணம் முடிந்து, அங்கு சென்று இறங்கும் போது, உடல் ஒத்துழைக்க வேண்டும். குளிர் பிரதேச மாநிலங்களுக்கு செல்லும் போது உணவை உடல் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உடல், மனரீதியாகவும் அதற்கு தயாராக செல்ல வேண்டும். சூழல் எப்படி மாறினாலும், வெற்றி ஒன்றே நம் இலக்கு என்பதை துாக்கத்திலும் மறக்க கூடாது. கல்லுாரி உடற்கல்வி ஆசிரியர் சுஜாதா, தடகள பயிற்சியாளர் திவ்யநாகேஸ்வரி உடனிருந்து ஊக்கம் தருகின்றனர்.
என்று சொன்ன வைஷாலியின் தந்தை கணேசன், காய்கறிகடை நடத்தி வருகிறார். தாயார் தமிழ்செல்வி, இல்லத்தரசி. சகோதரர் பிரவீன், பெங்களூரு ஐ.டி.,யில் பணிபுரிகிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!