காசியின் சிறப்பம்சங்கள்:
காசியில் பிரதமர் மோடியின் சொந்த தொகுதி வாரணாசி. நாடு முழுதும் உள்ள ஹிந்துக்கள் இங்குள்ள கங்கை நதியில் புனித நீராடி, காசி விஸ்வநாதர் கோவில் உட்பட 2,000க்கும் மேற்பட்ட கோவில்களை தரிசிப்பதை வாழ்வின் ஒரு அங்கமாக கடைப்பிடிக்கின்றனர். பழங்காலத்தில் இருந்தே, காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே, கலை, கலாசாரம், ஆன்மிக ரீதியாக நெருங்கிய தொடர்பு உள்ளது.
இந்த உறவு குறித்து இரு மாநிலங்களை சேர்ந்தவர்கள் அறிந்து கொள்ளவும், இரு மாநில கலாசாரம், பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்களை பகிர்ந்து கொள்ளவும், 'காசி தமிழ் சங்கமம்' என்ற நிகழ்வுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வி அமைச்சகம் செய்தது. இத்துறையுடன் உத்தர பிரதேச அரசு, மத்திய கலாசாரம், ஜவுளி, ரயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல் ஒலிபரப்பு உள்ளிட்ட துறைகளும் இணைந்து செயல்படுகின்றன.
பங்கேற்பு:
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, இசையமைப்பாளர் இளையராஜா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர்கள் பங்கேற்றனர். மேலும் மாணவர்கள், ஆசிரியர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், ஆன்மிகவாதிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர் உட்பட பல்வேறு பிரிவினர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இளையராஜா பேசியவதாவது:
காசிக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு அதிகம். பாரதியார் காசியில் 2 ஆண்டுகள் தங்கியுள்ளார்.
பாரதியார் 9 -11ம் வகுப்பு காசியில் பயின்றது தமிழ் மக்களுக்கு பெருமை. பாரதியார் பாடலை பற்றி சுட்டிக்காட்டினார். முத்துசாமி தீட்சதர் பற்றி நினைவு கூர்ந்தார். இவர் மும்மூர்திகளுள் ஒருவர் ஆவர்.
தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை காசி என்னும் புண்ணிய பூமியில் நடத்துவதற்கான ஆலோசனை பிரதமருக்கு எப்படி தோன்றியது என்று எண்ணி வியந்து மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியவதாவது:
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 12 குழுக்கள் வர உள்ளன. ராமர், சிவ பெருமன் ஆகிய இருவரின் தொடர்புகள் குறித்து எடுத்துரைத்தார்.
காசியை போலவே, தமிழகத்தில் தென்காசியும், சிவகாசியும் உள்ளது. இங்கு காசியில் இருந்து, சிவனை கொண்டு சென்று வழிபாடு தலங்கள் உருவாக்கப்பட்டவை. ராமேஸ்வரம், காசியில் உள்ள ஜோதிர் லிங்கங்கள், தமிழகம், காசி இடையயோன தொடர்பை விளக்குகிறது. காசியில் பல்வேறு இடங்களிலிருந்து மக்கள் வருகை புரிகின்றனர் என்றார்.
புனித பூமியான வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி:
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியவதாவது : ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி. புனித பூமியான வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை பறைசாற்றும் நிகழ்வு. இவ்வாறு அவர் கூறினார்.
13 மொழிகளில் மொழிபெயர்ப்பு: திருக்குறள் புத்தகம்
இந்த நிகழ்ச்சியில் 13 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ள திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த நிகழ்வு அரங்கில் இருப்பவர்களின் வியப்பூட்டும் வகையில் அமைந்தது.
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். இது தமிழ மக்களின் கலாச்சாரத்தை நினைவுக் கூரும் வகையில் அமைந்தது. பிரதமரின் இந்த ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது.
0 /.....