ADVERTISEMENT
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 21ம் தேதி இறுதி விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பழனிசாமி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியுள்ளதாவது: தொண்டர்கள் விருப்பம் மற்றும் கட்சியின் நலனை கருத்தில் கொண்டே ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே பொதுக்குழு கூட்டப்பட்டது.
பொதுக்குழு கூடுவதற்கு முன்னதாக பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சி விதிகளை பன்னீர்செல்வம் மீறியுள்ளார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், நிவாரணம் பெற அவருக்கு தகுதியில்லை. இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
All are culprits. A new with strong leadership is absolutely required to fight against BJP or otherwise AIADMK party would be eliminated from Tamilnadu. Mostly, the death of the party first OPS and secondly EPS.
ஜெயலலிதா என்ற தலைவி 30 ஆண்டுகாலம் தன் கூடவே ஒட்டிக்கொண்டு திரிந்த சசிகலாவை எப்போதும் எம்ஜிஆர் தொடக்கிய அதிமுக என்ற கட்சிக்குள் அண்ட விடவில்லை. சசிகலாவின் உறவினர் என்ற ஒற்றை தகுதியோடு கட்சிக்குள் நுழைந்து சிலகாலம் இருந்த டிடிவி தினகரனையும் தன் கண்முன்னே வரக்கூடாது என்று ஜெயலலிதா கட்சியை விட்டு துரத்திவிட்டு விட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவும் டிடிவி தினகரனும் அதிமுகவை கைப்பற்ற செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
தற்போது உள்ள அனைத்து நிர்வாகிகளையும் நீக்கிவிட்டு புதிய நிர்வாகம் பதவி ஏற்க வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதிமுக வுக்கு ஒரே ஒரு விதிதான் உள்ளது.