புதுடில்லி: குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் நவீன முறையை அமல் படுத்தியதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
ஐ.சி.எப்.பி., எனப்படும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்துக்கான சர்வதேச கூட்டமைப்பின் மாநாடு, தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் நேற்று நடந்தது.
இதில் குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய நாடுகளுக்கு விருது வழங்கப்பட்டது.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக செயல்படும் நாடு என்ற பிரிவில் இந்தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது, குடும்ப கட்டுப்பாடு முறையில் நவீன கருத்தடை முறைகளை அமல்படுத்தி, சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ''குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்தியாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்த பிரிவில் இந்தியா மட்டுமே விருது பெற்றுள்ளது.
மத்திய பா.ஜ., அரசின் சிறப்பான செயல்பாடுகளால் இந்த பெருமை நமக்கு கிடைத்துள்ளது,'' என, தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
இன்னும் கொஞ்சம் நாளில் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி....இந்தியா முதல் இடத்துக்கு வந்து விடும்.... அதற்கு தான் இந்த விருதா ???
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல் படுத்திய தமிழகம், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரையும் சிறப்பாக கௌரவிக்க வேண்டும், அதுதான் அவர்களுக்கு ஊக்க மருந்து, டானிக் எல்லாம், சும்மா பேப்பரில் பேசிக்கொண்டாள் மட்டும் பத்தாது ,
சில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி படித்தேன். அதில் இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவை விட அதிகம் என்று. அப்படி இருக்கையில், என்ன கட்டுப்பாடு, எப்படிப்பட்ட கட்டுப்பாடு இந்தியா செய்தது இந்த விருதைப்பெற?
குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் நவீன முறையை அமல் படுத்தியதற்காக, இந்தியாவுக்கு சர்வதேச விருது ... அடுத்த ஆண்டில் உலக மக்கள் தொகையில் உலகில் முதல் இடத்தை பிடிப்பதற்காக கிடைக்கும் விருது இந்தியா பொருளாதாரத்தில் சீனாவை மிஞ்சுவதில்லை மக்கள் தொகை பெருக்கத்தில் மிஞ்சப்போகும் நாட்கள் மிக சமீபம் இந்தியாவில் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் மக்கள் தொகை உலகில் முதல் இடம்
மக்கள் தொகை கட்டுப்படுத்த நாட்டு மக்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்....அதை விடுத்து ஒரு சாரார் மக்கள் தொகையை குறைக்க குடும்பக்கட்டுப்பாடு செய்ய ...மற்றொரு தரப்பு மக்கள் தொகையை கூட்டும் செயலில் ஈடுபடுகின்றனர்..... ....குடும்பக்கட்டுப்பாடு அலுவர்கள் அந்த சமூக மக்களை சீண்டுவதே இல்லை .....பிறகு எப்படி மக்கள் தொகை கட்டுக்குள் வரும்???