அமெரிக்கா - 55%
சமீபத்திய புள்ளிவிவரப்படி அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 55 சதவீதம் குறைந்தபட்ச அளவாவது தங்களது முதலீடுகளை பங்குகளில் போட்டு வைத்துள்ளனர். அமெரிக்காவின் மக்கள் தொகை 33 கோடி. அதில் வருவாய் ஈட்டுபவர்கள், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என பார்த்தால் 26 கோடி பேர் இதில் சுமார் 18 கோடி மக்கள் தங்கள் நாட்டின் பங்குச்சந்தையில் முதலீடு செய்து தொழில் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றனர். அமெரிக்கா பணக்கார நாடாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
ஆஸ்திரேலியா - 40%
ஆஸ்திரேலியர்கள் சுமார் 40 சதவீதம் அநாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆஸ்திரேலிய பங்குச்சந்தை அங்கு பழமையானது. ASX என்று இது அழைக்கப்படுகிறது.
பிரிட்டன் - 33%
ஜப்பான் - 30%
வல்லரசு நாடான ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 12 கோடி. அதில் 30 சதவீதம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பழக்கம் கொண்டவர்கள் என்கிறது புள்ளிவிவரம்.
கனடா - 25% அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவும் கல்வியறிவு மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய சமூகத்தினை கொண்ட நாடு. இங்குள்ள 25% உள்நாட்டவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்கின்றனர்.
சீனா - 13%
நாம் போட்டி நாடாக கருதக்கூடிய சீனாவின் மக்கள் தொகை 145 கோடி. கிட்டத்தட்ட நம் மக்கள் தொகைக்கு இணையானது. இதில் 18 கோடி பேர் அந்நாட்டு பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். அப்பணம் அவர்கள் நாட்டின் தொழில் நிறுவனங்களுக்கு செல்கிறது. அது பொருளாதாரம் மேம்பட பயன்படுகிறது.
இந்தியா - 7%
இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடி. இங்கு 10 கோடி டீமேட் கணக்குகள் உள்ளன. ஒருவரே எத்தனை டீமேட் கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால் ஒரு 20 சதவீதம் கழித்தால் கூட சுமார் 8 கோடி பேர் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இது சீனாவுடன், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த அளவாகும்.
ஏன் தயக்கம்?
இந்தியாவைப் பொறுத்தவரை மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் பங்குச்சந்தைகளில் பரவலாக முதலீடு செய்து வந்தனர். அனைத்தும் ஆன்லைன் மயமான பின்னர், டீமேட் கணக்கு தொடங்குவது, பணம் போடுவது, எடுப்பது எளிதானதால் தென்னிந்தியா உட்பட இந்தியாவில் பரவலாக இளைஞர்கள் பங்குச்சந்தை நோக்கி திரும்பியுள்ளனர். இதிலும் நீண்ட கால முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குறைவு. ஆப்ஷன்ஸ் டிரேடிங் செய்து கையை சுட்டுக்கொள்பவர்கள் தான் ஏராளம்.
நம் மக்களிடம் லட்ச ரூபாய்க்கு 15 சதவீத வட்டி தருகிறேன் என்றாலும், எப்படி அவ்வளவு தர முடியும் என்றெல்லாம் யோசிக்காமல், கண்ணை மூடிக்கொண்டு பணத்தை போடுவார்கள். முதல் முழுவதையும் இழந்து வருந்துவார்கள். ஆனால் பங்குச்சந்தை அப்படி கிடையாது. அறிவைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இடம். முதல் குறையக் கூடிய ஆபத்து இருந்தாலும், சந்தை எப்படி இயங்குகிறது, நிறுவனப் பங்குகளின் விலை எந்தெந்த காரணங்களால் ஏற்றம் காணும், சரிவைக் காணும், தரமான நிறுவனத்தை கண்டறிவது எப்படி, பங்குவிலை நியாயமானதாக உள்ளதா என்பதைப் பற்றி எல்லாம் படித்து தெரிந்துகொண்டு, சந்தையின் போக்கை உணர்ந்துக் கொண்டால் கணிசமான லாபம் பார்க்கலாம்.
வாசகர் கருத்து (13)
சூதாட்டத்திற்கும் - பங்குசந்தை முதலீட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
பொழுது விடுஞ்சு பொழுது போனா தங்கத்தில பதுக்கவே நேரம் சரியா இருக்கு,
நம்நாட்டில் லஞ்சம் வாங்கி ஃ டெண்டரில் கமிஷன் அடித்து அயல்நாடுகளில் சொத்துக்களை வாங்கிக்குவிக்கும் அரசியல் ஊழல் பெருச்சாளிகள் இந்திய பங்குச்சந்தையில் அந்த பணத்தை போட்டால் இந்தியாவின் பொருளாதாரம் உயரும் ஆனால் செய்ய மாட்டார்கள் திரையுலக நடிகர்கள் கோடிகோடியாய் ரசிகர்கள்மூலம் சம்பாதிக்கும் பணத்தையும் வெளிநாடுகளிலும் , சுவிஸ் வங்கிகளிலும் முதலீடு செய்கின்றனர் இதை மத்தியஅரசு தடை செய்ததுடன் அந்த முதலீடுகளை கையகப்படுத்தி நம் நாட்டிற்கு பயன்படுமாறு செய்ய வேண்டுப் மத்திய அரசு செய்யுமா?
பொருளாதார மேம்பாடு குறித்த மக்களின் பார்வை இந்த ஆட்சியில் நம்பிக்கை தரும் அளவில் இல்லாததால் பங்கு சந்தை முதலீடு செய்ய மக்களிடம் ஆதரவு இல்லை. அதற்கேற்றாற்போல் நமது நிதி அமைச்சரின் செயல்பாடும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் திறமையும் அவர்களின் பதவிக்கு பொருந்தாத வகையில் இருப்பதும் மக்களின் தயக்கத்திற்கு ஒரு காரணம்.
இலங்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பங்கு சந்தை திருடர் கையில் சிக்கி உள்ளதால் முதலீடு செய்ய பயப்படுகிறார்கள்