பொங்கல் பரிசு தொகுப்பு சர்க்கரை கார்டுக்கு உண்டா?
சென்னை,-ஜனவரியில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்காக, அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு சர்க்கரை கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசு, பொது மக்களின் விருப்பத்தின்படி, ரேஷன் கார்டுகள் வழங்குகிறது. ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் கால நிவாரண தொகை என, இலவச திட்டங்களும் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள், சர்க்கரை கார்டுதாரர்களுக்கு கிடைப்பதில்லை.
வசதியாக இருந்தபோது, சர்க்கரை கார்டுகள் வாங்கியவர்களில் பலர் பணியில் இருந்து ஓய்வுபெற்றது, பிள்ளைகள் கவனிக்காதது உள்ளிட்ட காரணங்களால் ஏழ்மை நிலையில் உள்ளனர்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஜனவரியில் வழங்கப்படும் பொங்கல் பரிசை வாங்குவதற்காக, சர்க்கரை கார்டுதாரர்கள் தங்களின் கார்டை, அரிசி கார்டுதாரர் களாக மாற்றிக் கொள்ள, ஆண்டு இறுதியில் அவகாசம் அளிக்கப்பட்டது.
தற்போது, 3.83 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, அவற்றை வாங்க அரிசி கார்டுக்கு மாற வாய்ப்பு அளிக்குமாறு சர்க்கரை கார்டுதாரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாசகர் கருத்து (13)
மழை வெள்ளம் ரோட்டில் வடியவில்லை பொங்கல் பரிசு மண்ட வெல்லம் வீட்டில் வருகிறது டம்ளர் கொண்டு வாருங்கள் பிடிப்பதற்கு
5 1/2 கோடி கடனை தாண்டி 6 கோடி லட்சத்தை நோக்கிய பயணம் தொடரட்டும் .
சென்ற முறை வழங்கியதன் " பெருமையே " தாங்கவில்லை. இந்த முறை படம் போட்ட மஞ்சள் பை நிச்சயம்.
வீட்டில் வடியாத வெள்ளம் ரோட்டில் கேட்கவே வேண்டாம் தாழ்வு மண்டலம் வராமல் மனதுவைக்க வேண்டும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழர் திருநாளன்று பிச்சை? பொங்கலுக்கு மணமான செல்ல மகள்களுக்கும் அண்ணன்மார் சகோதரிகளுக்கும் வரிசை வைப்பதும் பேரக் குழந்தைகளுக்கும் "காசு" தருவதும் ஏன் சில பெரும் தானங்கள் தனது வேலைக்காரர்களுக்கு பரிசு தருவதுண்டு ஒரு வைர வியாபாரி அனைவருக்கும் வீடு கார் என்று கொடுத்து அசத்தினார் ஒன்றிய அரசு தீபாவளி போனஸ் தருகிறது இங்கே பொங்கல் போனஸ் அரசு ஊழியர்களுக்கு பிறருக்கு??????? இந்த நாட்டை வளமாக்க விவசாய தொழிலாளியும் இன்னபிற தினக்கூலிகளும் வேர்வை சிந்துவது சிலர் கண்ணில் தெரிவதில்லை