Load Image
Advertisement

 ராஜிவ் கொலையாளிகளை விட்டீங்களே: விடுதலை கேட்கிறார் 80 வயது சாமியார்!

புதுடில்லி,-'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்தது போல், கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னையும் விடுதலை செய்யுங்கள்' எனக் கோரி, கர்நாடகாவைச் சேர்ந்த 80 வயது சாமியார், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Latest Tamil News

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஷரத்தானந்தா என்றழைக்கப்படும் முரளி மனோகர் மிஸ்ரா, தன் மனைவியை கொலை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மைசூரின் முன்னாள் திவான் சர் மிர்ஸா இஸ்மாயிலின் பேத்தி ஷகரேக் நமாஸியை, 1986ல் திருமணம் செய்திருந்தார் ஷரத்தானந்தா.

கடந்த 1991, ஏப்., 28ல் பெங்களூரில் உள்ள பங்களாவில் தன் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, உயிருடன் புதைத்து கொன்றதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம் இவருக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன.

ஆனால், உச்ச நீதிமன்றம் இதை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், ௧௯௯௪ல் இருந்து, தொடர்ந்து ௨௯ ஆண்டாக சிறையில் உள்ள, 80 வயதாகும் ஷரத்தானந்தா சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மனுவில் அவர் கூறியுள்ளதாவது:

ஒரே ஒரு கொலை வழக்கில் என்னை ஆயுள் முழுதும் சிறையில் அடைத்துள்ளனர். தண்டனையை குறைக்க முடியாது என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
Latest Tamil News
ஆனால், சிறை நிர்வாகம், எனக்கு ஒருமுறை கூட பரோல் தரவில்லை.

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மற்றும் அவருடன் பலர் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

என்னுடைய வழக்கில் தனிமனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. ராஜிவ் கொலையாளிகளைப் போல, என்னையும் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (41)

  • அப்புசாமி -

    ஈவு இரக்கமில்லாம கட்டுன பொண்டாட்டியை கொலை செய்தவனுக்கு கருணை எதுக்கு?அப்பவே தூக்கில் போட்டிருந்தா இப்போ இதுமாதிரி கேள்வி எழாது? 29 வருஷமா தண்டச் செலவு. நல்ல நீதிமன்ற தீர்ப்பு.

  • venugopal s -

    நீதிமன்றத்தை நாடி,போராடி, வெற்றி பெற்று வெளியே வரலாமே யார் கூடாது என்றார்கள்?

  • Dees - Chennai,இந்தியா

    கொலைக்கு உடந்தை ஆகா இருந்தவர்களுக்கு நீதி மன்றம் தக்க தண்டனை கொடுத்து அவர்கள் அதை முழுவதுமாக அனுபவித்து முடித்து பலகாலமாகிவிவிட்டது, அவர்களை தண்டனை காலம் முடித்தபின்னும் சிறை வைத்ததே சட்ட மீறல், புரியுதா ?

  • Dees - Chennai,இந்தியா

    அட அறிவு

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    கொலை செய்ததின் நோக்கம் வேறு பட்டாலும், கொலை கொலையே. காரணம் என்னவாக இருந்தாலும், ஒரு மனிதனின் உயிரை மற்றொரு மனிதன் பறிக்க கூடாது. கொலை செய்துவிட்டு, எனக்கும் அதேபோல் நீதி வழங்கவேண்டும் என்று கேற்பது சரியல்ல. நீதி வழங்கும் நீதிமான்களும், வழக்குகளை சரியாக ஆராய்ந்து சரியான தண்டனை கொடுக்கவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement