ADVERTISEMENT
வேலுார்: ''கூட்டுறவு சங்கங்களில் தலைவர், செயலாளர் ஒன்றிணைந்தால் நாட்டையே கொள்ளையடித்து விடுவர்,'' என, அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் , மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த, 69வது கூட்டுறவு வாரவிழாவில், 1,248 பேருக்கு, 15.41 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை மக்கள் திருப்பி செலுத்த வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி செய்வர் என யாரும் நினைக்க வேண்டாம். கடனை திருப்பி செலுத்தினால்தான், அரசை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடன் தள்ளுபடி செய்து கொண்டேயிருந்தால் அரசு எப்படி நடக்கும்.

என் தொகுதியான காட்பாடியில், சைன மண்டலம் என்ற பகுதியிலுள்ள கூட்டுறவு சங்கத்தில், பலருக்கு கடன் கொடுத்துள்ளனர். கடன் வாங்கியவர்கள் அனைவரும் உண்மையானவர்கள் அல்ல. போலியான பெயரில் தலைவரும், செயலாளரும் இணைந்து கடன் வழங்கியுள்ளனர். இதனால், கடன் வாங்காதவர்கள் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள் ஒன்றிணைந்தால், இந்தியாவையே கொள்ளையடித்து விடுவர். மக்கள் நலன் கருதி கூட்டுறவு ஊழியர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
வாசகர் கருத்து (21)
ஏய், அவனுவ எல்லாம் தேவையே இல்லை...உன் கும்பல் போதும் கொள்ளை அடிக்க...உன் கூட்டத்தை அடிச்சிக்க முடியாது...
உத்தமர் சொல்லிட்டாருப்பா எல்லோரும் நல்லா கேட்டுக்கோங்க ..... இவரு சம்பாரிச்ச காசு எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு மூட்டை தூக்கி சம்பாரிச்சதுதான்
Durai should list out his Black money and Benami assets
கட்டுமரம் கருணாநிதி தன்னுடைய ஆயுள் காலம் முழுவதும் இந்த வேலைதானே செய்தார்? தொரை முருவனுக்கு தெரியாதா என்ன?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
வீட்டுல இருக்க நகையெல்லாம் அடமானம் வெச்சு கடன் வாங்கிட்ட்டு ஓடிப்போயிடுங்க, எங்கப்பன் ஆட்சிக்கு வந்ததும், மொத்தமா தள்ளுபடி பண்ணிடுவோம்னு மேடைக்கு மேடை பேசினாரே, அதெல்லாம் பொய்யா முருகன் ?