Load Image
Advertisement

காசியும், தமிழகமும் ஒன்னுதான் : சொல்கிறார் யோகி ஆதித்யநாத்


லக்னோ: காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
Latest Tamil News



Tamil News
Tamil News

'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி





காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே தொன்மையான நாகரீக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக ஒருமாத கால 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழக பிஎச்யு நிகழ்வின் ஒரு பகுதியாக காசி, தமிழ்நாடு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இரு பிராந்தியங்களுக்கு இடையே மக்களுடனான உறவை ஆழப்படுத்துவது என்பவை இதன் பரந்த நோக்கம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்''

இந்நிலையில், இது குறித்து உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்ட இணையத்தளம் பதிவில் கூறியிருப்பவதாவது: காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.

'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை'யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.

Latest Tamil News


'ராம சேது' போலவே இருக்கும்:






அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு.பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும் பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு.


இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து (56)

  • அப்புசாமி -

    உண்மைதான். அங்கே இருப்பவங்களும் உ.பி ஸ். இங்கே இருப்பவங்களும் உ.பி ஸ்.

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    CO-ORDINATES OF KEDARNATH 79.0669° E AND TIRUVANNAMALAI IS 79.0747° E (DIFFERENCE 0.0078). OUR ANCESTORS WERE WITH SUCH AN ELEVATED SENSE OF KNOWLEDGE OF CO-ORDINATES WITHOUT ANY SCIENTIFIC INSTRUMENTS. THERE IS NO SUCH THING IN NORTH INDIA.

  • g.s,rajan - chennai ,இந்தியா

    காசிக்குப் போயும் கருமம் தொலையல, நான் தமிழக மக்களின் விடியலைச் சொன்னேன் .

  • Ellamman - Chennai,இந்தியா

    ஓட்டுக்காக ஆடும் கழைக்கூத்தாடித்தனம் பரிதாபம். அந்தோ பரிதாபம்.

  • Ellamman - Chennai,இந்தியா

    சிவன் பேசியது தமிழ் மொழி என்று யோகி சொன்னதை ஏன் எழுத மறுக்கிறீர்?? பயமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement