Load Image
Advertisement

ரூ.5.10 கோடி கோவில் சொத்தை மீட்டு அறநிலையத்துறை அதிரடி

  ரூ.5.10 கோடி கோவில் சொத்தை  மீட்டு அறநிலையத்துறை அதிரடி
ADVERTISEMENT
கோவை : கோட்டைமேடு கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 5.10 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வணிக கட்டடத்தை, இருபது ஆண்டுகளுக்கு பின், ஹிந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது.

கோவை தெற்கு தாலுகாவுக்குட்பட்ட, சர்வே எண் 1309/2 கொண்ட, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம் கோட்டை பெருமாள் கோவில் வீதி, கதவு எண்-212, பிளாக் 22ல் 2, 931 ச.அடியில் இருந்தது.

இந்த வணிக கட்டடம், பாலசுப்ரமணியம் என்பவரது பெயரில் குத்தகைக்கு எடுக்கப்பட்டு மூன்றாம் நபர் பயன்படுத்தி வந்தது, அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதற்கான வாடகை உள்ளிட்ட குத்தகை இனங்கள், 20 ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு, கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கோர்ட்டிலும், தொடர்ந்து கோவை மாவட்ட கோர்ட்டிலும் நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டடத்தை கையகப்படுத்தி, சீல் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

கோவில் செயல் அலுவலர் சரவணக்குமார், தக்கார் செல்வம் பெரியசாமி, அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ராம்குமார் மற்றும் சரண்யா, கோவில் மற்றும் அறநிலையத்துறை பணியாளர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, வணிக கட்டடத்தை கோவில் வசம் கொண்டு வந்தனர்.

செயல் அலுவலர் சரவணக்குமார் கூறுகையில், ''கோர்ட் உத்தரவுப்படி காலை 11:00 மணிக்கு, வணிக கட்டடம் காலி செய்து, கோவில் வசம் சுவாதீனம் கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்ட இக்கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டடத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார், 5 கோடியே 10 லட்சம் ரூபாய்,'' என்றார்.


வாசகர் கருத்து (2)

  • Raa - Chennai,இந்தியா

    இருபது வருடங்களாக ஏன் பண்ணவில்லை?

  • Raa - Chennai,இந்தியா

    இருப்பது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement