Load Image
Advertisement

அறுவை சிகிச்சை இலக்கு நிர்ணயித்து அரசு டாக்டர்களுக்கு அழுத்தம் தராதீர்

சென்னை-'கால்பந்தாட்ட மாணவி உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளை தவிர்க்க, அரசு டாக்டர்களுக்கு இலக்கு நிர்ணயித்து அழுத்தம் தரக் கூடாது' என, அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
Latest Tamil News

சங்கத் தலைவர் சாமிநாதன், செயலர் ராமலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை செய்து கொண்ட கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்தது வருத்தத்திற்குரியது.

இதுபோன்ற அறுவை சிகிச்சைகள், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் போன்ற அனைத்து வசதிகளும் நிறைந்த பெரிய மையங்களில் மட்டுமே செய்யப்பட்டு வந்தன.

சிறப்பு சுகாதார திட்டத்தின் கீழ், குறைவான வசதிகள் உள்ள மாவட்ட மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளிலும், இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்ய, டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சை செய்யாத டாக்டர்களிடம், உயரதிகாரிகள் விளக்கம் கேட்கின்றனர்.

மேலும், அறுவை சிகிச்சைக்கு இலக்கு நிர்ணயிப்பது, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது. பெரியார் நகர் அரசு மருத்துவமனை போன்ற சிறிய மருத்துவமனையில், பணிச்சுமை அதிகம் இருக்கும்.

டாக்டர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறு செய்ததுபோல், பொது வெளியில் சித்தரிப்பது வருங்காலத்தில் அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகளில் உயர்தர அறுவை சிகிச்சை செய்யும் மன நிலையை அழித்து விடும்.

எனவே, துறை ரீதியாக முறையான, விரிவான விசாரணை வாயிலாக, சுகாதார கட்டமைப்பில் தகுந்த மாற்றங்களை செய்ய வேண்டும்.

டாக்டர்களுக்கு இலக்கு கொடுத்து அழுத்தம் தரக் கூடாது. அதுவே, இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க உதவும்.
Latest Tamil News
நர்ஸ்கள், உதவியாளர் பற்றாக்குறை ஆகியவை, டாக்டர்களுக்கான பணிச் சுமை அதிகரிக்க காரணமாக உள்ளது.

பல அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகளுக்குத் தேவையான, சில கருவிகள் இல்லாததால், டாக்டர்கள் அவர்கள் சொந்த உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர்.

இதுபோன்ற சேவை மனப்பான்மையுடன் செயல்படும் அரசு டாக்டர்களை வன்மம் கொண்டு சித்தரிப்பது வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (15)

 • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

  அரசாங்க ஹோச்பிடலில் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது பயிற்சி டாக்டர்களே.

 • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

  இந்த கும்பல் கொஞ்சம் குறையும் ....

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  ஒரு சங்கம் என்பது தங்களை காப்பாற்றிக்கொள்வதற்கு என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை அதே நேரத்தில் பணிநேரத்தில் என்ன நடக்கிறது என்பதையும், அவைகளை எப்படி தவிர்க்கலாம் என்பதையும் கவனிக்கவேண்டும், நோயாளிகளைப்போல் உள்ளே நுழைந்து பார்த்தல் நடப்பது என்ன என்று தெரியும், எங்குமே நேர்மையானவர்களை நாம் எந்த ஒரு குறையுமே கூற முடியாது, குறிப்பாக இளைஞர்கள் கூட்டமாக அமர்ந்து கண்டு பேசுவதும் கைபேசி பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது எங்கு என்று நினைக்கலாம் ரோட்டில் அடிபட்டு உயிருக்கு போராடும், ஊசலாடும் வார்டுகளில்தான் இத்தனையும். படுக்க வசதி இல்லை, நோயாளிகளில் உற்றார் உறவினர்கள் கைகளில் ட்ரிப்ஸ் ஏற்றும் பாட்டிலைகளை கைகளில் பிடித்த வண்ணம் நிற்பதம் உட்காருவதும், இருக்கும் நிலையில் இளம் மருத்துவர்கள் இப்படி செயல்படுவது வருத்தம் அளிக்கிறது. நோயாளிகளுக்கு தேவை அன்பு, ஆறுதல், மருத்துவம், தற்போது மருத்துவம் மட்டுமே பார்க்கப்படுகிறது. மாறாக நோயாளிகளையும் அவர்கள் சார்ந்தவர்களையும் வேற்று கிரகித்து மனிதகர்களாக பார்க்கும் நிலை மாறவேண்டும், அவர்கள் கேட்க்கும் சந்தேகங்களை தீர்க்க ஒரு மருத்துவக் குழுவை ஏற்படுத்தவேண்டும், விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் போல் உள்ளே நோயாளிகளை போட்டுவிட்டு வெளியே நின்று கொண்டு அரிசி வருமா, தவிடு வருமா , நோய்யாக வெளியே வருமா என்ற ஏக்கத்தில் நிற்கும் குடும்ப நிலையை யாருமே கண்டு கொள்வதில்லை, இந்த சங்கங்கள் இது போன்ற தவறு செய்யும் இளம் மருத்துவர்களை கண்டிக்க வேண்டும், ஒவ்வொரு நோயாளிகளிடமும் அவர்களது குடும்பத்தார்களுடனும் கலந்து பேசி உண்மையைக் கூறி அவர்களுக்கு ஆறுதல் கூறவேண்டும், இப்படி செய்தால் நோயாளிகள் பாதி குணம் அடைவார்கள், புனிதமான மருத்துவத்துறையில் மிக முக்கியம் மனித நேயமே ? வந்தே மாதரம்

 • sridhar - Chennai,இந்தியா

  அறுவை சிகிச்சை கணக்கு காட்ட வேண்டும் என்றால் திக திமுக விசிக தலைவர்களுக்கு, அவங்க குடும்பத்துக்கு செய்யுங்கள். நல்ல செய்தி வரட்டும்.

 • HONDA -

  இறப்புக்கு அரசாங்கம் தான் காரணமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement