Load Image
Advertisement

காலில் விழுந்தவரின் காலில் விழுந்த அண்ணாமலை

Tamil News
ADVERTISEMENT
ஈரோடு: ஈரோடு அருகே, தனது காலில் விழுந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவரின் காலை அண்ணாமலை தொட்டு பதிலுக்கு கும்பிட்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலைவாழ் மக்கள் வசிக்கும் தாமரைக்கரை பகுதிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவது போல், இங்கு தங்களுக்கு ஜாதி சான்றிதழ் இங்கு வழங்கப்படுவதில்லை.


இதனால், கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக அழுதபடி அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தார்.

Latest Tamil News

அதனை அண்ணாமலை பெற்றுக் கொண்ட போது, அவரது காலில் மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் விழுந்தார். உடனடியாக அவரை தூக்கிவிட்ட அண்ணாமலை , அவரது காலை தொட்டு கும்பிட்டார். அழுதபடி இருந்தவருக்கு ஆறுதல் கூறியதுடன் தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

Latest Tamil News
பிறகு, அந்த பகுதியை சேர்ந்த பூமிகா வெள்ளையன் என்பவரது வீட்டிற்கு சென்ற அண்ணாமலை, களி உணவை கேட்டு வாங்கி அருந்தினார்.


வாசகர் கருத்து (39)

  • தமிழன் - கோவை,இந்தியா

    நானும் தலைப்பை பார்த்தவுடன் தமிழ்நாட்டில் ஒரு ஆள் ஊர்ந்து போய் காலில் விழுந்து ஆட்சியை பிடிபவன் காலில் அண்ணாமலை விழுந்ததாக நினைத்தேன்.... இதெல்லாம் ஓட்டுக்காக என்று ஃபிரி.கே.ஜி குழந்தைக்குக் கூட தெரியும்

  • TRUBOAT - Chennai,இந்தியா

    வோட் வேணும்னா என்ன வேணாலும் செய்வோம். இதை செய்ய மாட்டோமா...

  • Soumya - Trichy,இந்தியா

    இவரை போன்ற படித்த தையிரியமான தலைவன் தான் தமிழ்நாட்டுக்கு தேவை

  • balakrishnan - Mangaf,குவைத்

    அண்ணாமலை அவர்கள் சூப்பர் லீடர் .

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    இதெல்லாம் ரொம்ப அரத பழசு. நெறைய பாத்தாச்சு. இன்னும் ஏதாவது புதுசா முயற்சி பண்ணலாமே. சிரிப்பு வரல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement