Load Image
Advertisement

மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து மிரட்டிய வாலிபர்களிடம் விசாரணை

Tamil News
ADVERTISEMENT
திருச்சி : முசிறியில், பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து, 'வீடியோ' வெளியிட்ட மூன்று பேரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


திருச்சி மாவட்டம், முசிறி அருகே, அந்தரப்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாதன், 21. கடந்த ஏப்ரலில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த, 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பைக்கில் அழைத்துச் சென்று, தைல மரக்காட்டில் வைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அதன் பின், சிறுகாம்பூரைச் சேர்ந்த மணிகண்டன், 27, கணேஷ், 24, உட்பட ஐந்து பேருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார்.குளிர் பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்கத்தில் இருந்த மாணவியுடன் நண்பர்களை உல்லாசமாக இருக்க வைத்து, அதை வீடியோ எடுத்துள்ளனர்.

அதன் பிறகும், தொடர்ந்து அந்த மாணவியை வரவழைத்து நெருக்கமாக இருந்துள்ளனர்.இந்நிலையில், 16 வயது பள்ளி மாணவி, வாலிபர்களுடன் பழக்கத்தில் இருப்பதை அறிந்து, மாணவியின் தந்தை அதிர்ச்சியடைந்தார்.அதனால், மாணவியின் படிப்பை நிறுத்தி, கடந்த மே மாதம், திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக, ரங்கநாதனும், அவரது நண்பர்களும், மறைமுகமாக சமூக நலத்துறைக்கு புகார் செய்துள்ளனர்.புகார்படி, மாணவியின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய சமூக நலத்துறையினர், 16 வயது மாணவியை மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

இது தொடர்பாக, திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


இந்நிலையில், நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக, ரங்கநாதன் கூட்டாளியாக இருந்த ஒருவர், மாணவியுடன் வாலிபர்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று, ரெங்கநாதன், மணிகண்டன் மற்றும் கணேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.இதில், மிகப்பெரிய, 'நெட்வொர்க்' இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அனைவரையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement