''நானும் ஒரு வசூல் மேட்டர் சொல்லுதேன்... ஆனா இது தேர்தல் வசூல் வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''தி.மு.க.,வினர் ஒருபடி மேல போயி, மக்களிடம் தேர்தல் நிதி வசூலிக்க முடிவு செய்துட்டாவளாம்... அதிக நன்கொடை வசூலிக்கும் மாவட்டத்துக்கு வழக்கம் போல பரிசுகள் வழங்க போறதா அறிவிச்சு, வேலையில் இறங்கிட்டாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''என்ன ஒரு ஒத்துமை பார்த்தேளா... நான் சொல்லப்போறதும், 'வசூல்' சங்கதி தான் ஓய்...'' என, உரக்க சிரித்தார் குப்பண்ணா.
''சரி, அதையும் சொல்லுங்க கேப்போம்...'' என்றார் அந்தோணிசாமி.
''கோவை மாநகராட்சியில உசந்த பதவியில இருக்கற அந்த மக்கள் பிரதிநிதி, திடீர் அதிர்ஷ்டத்துல தான் அந்த பதவிக்கே வந்ததா, ஆளுங்கட்சிக்காரா சொல்றா... ஆரம்பத்துல, அமைதியின் உருவமா இருந்த அந்தம்மா, 'வசூல் வேட்டை'யில இப்ப சந்திரமுகியா மாறிண்டு வர்றாங்களாம் ஓய்...
''உள்ளாட்சித் துறையின், 'தலை'யான திருச்சிக்காரர், அந்தம்மா செலவுக்கு மாசம் 15 லட்சம் ரூபாய் சொளையா கொடுக்கறாராம்... ஆனா அது, 'பத்தல பத்தல'ன்னு பாடிண்டு இருக்கா...
''உதவி கமிஷனர், டவுன் பிளானிங் அதிகாரிகள், இன்ஜினியர்களை கூப்பிட்டு, 'ஆளுக்கு மாசம் 5 லட்சம் கொடுத்திடுங்கோ'ன்னு சொன்னதுல அவாள்லாம் ஆடிப்போயிட்டா...
''இது எல்லாத்தையும் விட, 'ஹைலைட்டா'ன விஷயம் என்னன்னா, முதல்வரிடம் கோள் சொல்லி, துறை அமைச்சரையே மாற்ற அந்தம்மா திட்டம் போட்டாராம் ஓய்...
''அதனால தான், மேயர், நிலைக்குழு மற்றும் கவுன்சிலுக்கு இருந்த அதிகாரங்களை கமிஷனருக்கு பிரிச்சு கொடுத்து சமீபத்துல அரசாணையே வெளியாச்சுன்னு சொல்றா... இப்படியே போனா, அந்தம்மா அஞ்சு வருஷத்தை தாண்டறதே கஷ்டம் தான் போலிருக்கு ஓய்...'' என்றார் குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
வாசகர் கருத்து (7)
பல சர்வாதிகாரிகள் வாழ்வு மக்கள் போராட்டங்களில் தான் முடிந்தது , இங்கும்?
அப்புறம் ஒன்கொல் விடியல் 5000 கோடி துபையில முதலீடு பண்ணும் போது உபியான இவிங்க ஒரு 50 கோடி பட்டியில முதலீடு பண்ண வேண்டாமா...
எப்படியும் மறுபடி வர போறது இல்லை இப்போவே கிடைச்சத சுறுட்டிகளாமுண்ணு முடிவு pannitaanuvo கொள்ளை கூட்டம்.....
NIA ED வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, உச்சநீதிமன்றம் எல்லோருக்கும் தமிழ்நாட்டில் நிறைய வேலை இருக்கிறது. இந்தியாவின் வளரும் பயங்கரவாதிகள் திமுக, சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்ஸ், மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர்க்கழகம் என்ற பெயரில் உலாவருகிறார்கள். கொலைகள் எல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது. முதல்வருக்கோ முஸ்லிம்களை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் என்னவோ தீபாவளி நேரத்தில் சிலிண்டர் பட்டாசு வெடித்ததுபோல் பயங்கரவாதத்தை மறைக்கப்பார்த்தார். ஆனால் எல்லைமீறி போனதால் NIAவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது = அது.