Load Image
Advertisement

50 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ரொக்கத்துக்கு பதில் டிஜிட்டல் ரூபாய்

 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ரொக்கத்துக்கு பதில் டிஜிட்டல் ரூபாய்
ADVERTISEMENT
மும்பை:'டிஜிட்டல் ரூபாயை' சில்லரை பரிவர்த்தனைக்கு பயன்படுத்துவது சம்பந்தமான சோதனை முயற்சியில் ரிசர்வ் வங்கி, எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., ஐ.டி.எப்.சி., எச்.டி.எப்.சி., ஆகிய வங்கிகளுடன் இணைந்து இறங்க உள்ளது.

இதில், 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இம்மாதம் முதல் தேதியிலிருந்து, மொத்தவிலை பிரிவில், வெள்ளோட்டமாக, டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

இம்முயற்சி வெற்றிபெற்றுள்ளதை அடுத்து, அடுத்தகட்டமாக, சில்லரை பரிவர்த்தனை பிரிவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்கான சோதனை முயற்சியை எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., ஐ.டி.எப்.சி., எச்.டி.எப்.சி., ஆகிய வங்கிகளின் துணையுடன் நடத்த உள்ளது, ரிசர்வ் வங்கி.

இந்த வங்கிகளில் உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களின் கணக்குகளுக்கு இடையே டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைக்கான வெள்ளோட்டம் நடத்தப்படும்.

சோதனை முயற்சிகள் வெற்றிபெறும் பட்சத்தில், மேலும் பல வங்கிகளில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகள் அறிமுகம் செய்யப்படும்.

சில்லரை பரிவர்த்தனையில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளில், ரொக்கத்துக்கு பதில் டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்படும்.

தனியார் மெய்நிகர் நாணயங்கள் பணமோசடி, பயங்கரவாதத்துக்கு நிதிஅளித்தல், வரி ஏய்ப்பு போன்றவற்றுக்கு வாய்ப்பளிப்பதாக உள்ளதால், அவற்றை ஏற்க இந்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தயங்குகின்றன.

இது போன்ற சிக்கல்களை தவிர்க்கும் வகையில், டிஜிட்டல் ரூபாயை அறிமுகம் செய்யும் முயற்சியில் தற்போது ரிசர்வ் வங்கி தீவிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (4)

  • Suthakar - Trichy,இந்தியா

    அப்போ அரசியல் வியாபாரிகளுக்கு???????

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    சரியான நேரத்தில் சரியான திட்டம். இந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வெற்றியடையும் பட்சத்தில் 80% பணிகள் வங்கிகளுக்கு குறையும். மேலும், Swift முறை இல்லாத நாடுகளுக்குள் வருங்காலங்களில் ஏற்றுமதி-இறக்குமதி பரிவர்த்தனைக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.

  • Nanthakumar.V - chennai,இந்தியா

    Ippo nama online la Rtgs Neft panrathu ellam digital illiya ...enna kiragam ithu... , 😱

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement