ஜி20 நாடுகளின் 17வது உச்சி மாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் இன்று (நவ.,15) துவங்கியது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இருவரும் சில வினாடிகள் உரையாடினர். அதன் பின்னர் மற்ற நாட்டு தலைவர்கள் பைடன் இருக்கை அருகே வந்து அவரை வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பைடன், மோடியின் இருக்கை அருகே அமர்ந்தார்.
முன்னதாக ஜெர்மனியில் ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டின்போதும், புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மோடியை தேடி சென்று அவரது தோளை தட்டி அழைத்த பைடன், தனது வாழ்த்துகளை தெரிவித்தார். பைடனை கண்டவுடன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற மோடி கைகுலுக்கி பதிலுக்கு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.
தலைவர்களுடன் சந்திப்பு
மாநாட்டின் இடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேசினர். இருவரும் சில நிமிடங்கள் உரையாடினர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக், பிரதமராக பதவியேற்றப்பின் இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர்.
அதேபோல், மாநாட்டில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டையும், பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜி20 மாநாட்டில் பங்கேற்ற 8 நாட்டு தலைவர்களுடன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதனைத்தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
வாசகர் கருத்து (42)
பெருமையான விஷயம்
சுடலை இப்போ மிளகாய் கடிச்சமாதிரி உட்கார்ந்திருப்பார்
அப்படியென்ன ஆங்காரம்..ஆத்திரமோ பிரதமர் மோடி மீது? ஐயா, தமிழ் நாட்டின் ஒரு சிறு பகுதியில் உட்கார்ந்து உங்களுக்குப் பிடிக்காத எதற்கும் பிரதமரை குறை சொல்வதை நிறுத்துங்கள். ஜனநாயக தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை நீங்கள் ஒத்துக் கொண்டு மரியாதை தந்தே ஆக வேண்டும். நீங்களும் உங்களது விடியல் மற்றும் ஏசுதல் கட்சி தலைவர்களும் எல்லாவற்றிற்கும் பிிதமரை குறை சொல்வதை நிறுத்திவிட்டால் உங்கள் வாழ்வு நலமாகும்.
இப்போது 200 ரூபா உபிஸ் கொத்தடிமைகள் கதறுவார்களாக
மோடி பக்கத்தில் போய் நின்று கை குலுக்குகிறார். மோடி தான் தோளில் சாஞ்ச மாதிரி தெரிகிறது பைடனும் பதிலுக்கு சாய்கிறார். குநியாமல் காலில் விழுந்து வணங்காமல் இருந்தா சரிதான்.