Load Image
Advertisement

தமிழக கால்பந்து வீராங்கனை மரணம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை ; விளையாட்டு வீராங்கனை உயிரிழக்க காரணமாக இருந்த, இரண்டு டாக்டர்கள் பணியிட சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிகுமார். அவரது மகள் பிரியா, 17; கால்பந்து வீராங்கனையான இவர், ராணிமேரி கல்லுாரியில், விளையாட்டு பிரிவில், பட்டப் படிப்பு படித்து வருகிறார்.

இவருக்கு, வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியதால், கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை நடந்தது. மேல் சிகிச்சைக்காக, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது கால் அகற்றப்பட்டது.

பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகத் தான், பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக, பெற்றோர் குற்றம் சாட்டினர்.இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:

பிரியாவின் வலது கால்மூட்டு ஜவ்வு சேதமடைந்து இருந்ததால், அவருக்கு மூட்டு உள்நோக்கி கருவியின் வாயிலாக, ஜவ்வு சரி செய்யும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்காக, ரத்த சேதத்தை தடுக்க, சுருட்டு கட்டு போடப்பட்டது. இதனால், ரத்த ஓட்டம் தடைபட்டு, உயிர்காக்கும் விதமாக காலை எடுப்பதற்கான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்புக்காக மிகவும் வருந்துகிறோம். அந்த மருத்துவமனையின் எலும்பியல் துறையை சார்ந்த இரண்டு டாக்டர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்நிலையில் பிரியாவின் உயிர் இன்று பிரிந்தது. இவரது குடும்பத்தினருக்கு ரூ. 10 ல்டசம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்படும் . இவ்வாறு அமைச்சர் கூறினார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (16)

 • SURESH M - madurai,இந்தியா

  வன்மம், மிகவும் கொடிய செய்தி,(சிறிய கவனக்குறைவால் ஏற்பட்ட இழப்பு) இவர்களின் பேச்சை கேளுங்களேன். ஆங்கில மருத்துவத்தை அடியோடு வெறுக்கணும்

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  நடந்தது வருந்தத்தக்க நிகழ்வு... தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தைரியம் வேண்டும்... இதேபோல் ஆயிரக்கணக்கான தவறுகள் தனியார் மருத்துவமனையில் நடந்தால் உயிர் போனாலும் சடலத்தை பில் கட்டினால் தான் தரப்படும் ... அதைப்பற்றி எந்த பகோடாவும் பேசாதுக... ஆனால் இங்கே வந்து நீட்டு பூட்டுன்னு கம்பி கட்டுங்க... ஆக்சுவலா அரசு மருத்துவமனையில் இந்த மாதிரி தவறு செய்பவர்கள் பெரும்பாலும் வசதியான ஆனால் தனியார் பள்ளிகளில் படிச்சிட்டு கிட்டத்தட்ட ஓசியில் அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிச்சிட்டு அங்கேயே மீண்டும் கிட்டத்தட்ட ஓசியில் மேல்நிலைப் பட்டம் வாங்கிட்டு கலெக்ஷன் ஏஜெண்டாக அப்போலோ போன்ற கார்பொரேட்களுக்கு ஓட காத்திருக்கும் பீஸ்கள் தான் என்பதை ஒத்துக்காதுக... என்ன பண்ண ரெண்டுமே உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ற பீஸ்கள்தானே.....😡😡

 • N SASIKUMAR YADHAV -

  திருட்டு திராவிட மாடலில் பணியிடமாற்றம் ஒன்றுதான் தூக்குதண்டனையைவிட அதிகபட்ச தண்டனை. அதுசரி ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகளை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பு கொடுத்த கட்சிதானே திருட்டு தீயமுக

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  ஏனய்யா சிம்ஸ் மருத்துவமனை வடபழனிக்கு சென்றால் சிறப்பு முகாமில் கைகால் எலும்பு நிபுணர்கள் நன்றாகவே ரோபாட்டிக் மூலமாக இரத்தக்கசிவு இல்லாமல் அதிக வலியும் இல்லாமல் கைகால் மூட்டுபாகங்களை அகற்றி சரிபார்த்து விரைவில் குணமாக்கி வெளியே அனுப்படுவார்கள். ஏன் அங்கே இந்த நபரை அழைத்துச்செல்லவில்லை. எலும்பு மருதுவர் நிபுணர் அசோக்குமார் அவர்களிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அனைவருமே நன்றாக இருக்கிறார்கள். எந்த விதவிதமான பாதிப்பே கிடையாது.

 • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

  இட ஒதுக்கீடு என்ற பெயரில் தகுதியவற்றவர்கள் மருத்துவதுறைக்கு வருவதின் விளைவு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement