Load Image
Advertisement

பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு தி.மு.க., தலைவர் ஸ்டாலின்... கடும் உத்தரவு

Tamil News
ADVERTISEMENT
வரும், 2024 லோக்சபா தேர்தலுக்கு தி.மு.க., ஆயத்தமாகி வரும் நிலையில், 'பூத் கமிட்டி' உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ''தேர்தலில் தோற்றால் நீங்கள் தான் பொறுப்பு; கேள்வி கேட்பேன் என்று மட்டும் நினைக்காதீர்கள்; நடவடிக்கை எடுப்பேன்,'' என, கடும் கண்டிப்பு தெரிவித்தார். அதேநேரத்தில், பலவிஷயங்களில் எப்போதும் முந்திக் கொள்ளும் அ.தி.மு.க.,வோ, கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவால், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை துவக்காமல் துாங்கி வழிவதால், அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் இழந்துள்ளனர்.

வரும், 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, தேசிய அளவில் மிகப்பெரிய சக்தியாக திகழ வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார்.

அதற்கேற்ப, 'கோஷ்டி பூசல் இன்றி, ஒருமித்த உணர்வுடன் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகுங்கள்; மக்கள் நலப்பணியில் தீவிரம் காட்டுங்கள்' என, கடந்த மாதம் நடந்த, தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசினார்.

இதனால், லோக்சபா தேர்தலில் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்து, கடுமையாக உழைக்க வேண்டும் என்ற கட்டாயம், தி.மு.க., அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பூத் கமிட்டி ஏஜென்டுகளுக்கு உருவாகி உள்ளது.

புகைப்படம்அடுத்த இரண்டு மாதங்களுக்குள், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்கவும், மாவட்ட செயலர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள, 234 தொகுதிகளிலும், அதிகபட்சமாக தலா, 300 பூத் கமிட்டிகள் உள்ளன.

பூத் லெவல் ஏஜென்டாக நம்பர் ஒன் நபராக, மாவட்ட செயலர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பெயராக மாவட்ட செயலர் பரிந்துரைத்த ஏஜென்ட் பெயர், மொபைல் போன் எண் குறிப்பிடப்பட்டு, அவரின் புகைப்படம் ஒட்டப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, தேர்தல் பணி தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

நாட்டிலேயே முதல் கட்சியாக, தி.மு.க., மட்டுமே, 6,000த்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டி ஏஜென்ட்களின் பெயர் பட்டியலை, தேர்தல் பணி அதிகாரியிடம் வழங்கி உள்ளது.

இதையடுத்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பூத் கமிட்டி உறுப்பினர்களுடன், மாவட்ட வாரியாக முதற்கட்ட ஆலோசனையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் துவக்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

புதுச்சேரியை தவிர்த்து, 39 தொகுதிகளிலும், நாம் வெற்றி பெற்றாக வேண்டும். வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் முகாமில், பூத் ஏஜென்ட்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வாக்காளர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல், இறந்தவர் பெயரை விடுவித்தல், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் போன்ற பணிகளை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றிக்கு அடித்தளமான, பூத் கமிட்டி வலுவாக இருக்க வேண்டும்.

பூத் கமிட்டியினர் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். வரும் தேர்தலில் தோற்றால், நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். வெற்றி பெற்றால் பாராட்டு வேன். தோல்வி அடைந்தால் கேள்வி கேட்பேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம்; நடவடிக்கை எடுப்பேன்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சோர்வுஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அ.தி.மு.க.,வில், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னரே, பிற கட்சிகளை முந்திக் கொண்டு, பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடுக்கி விடுவது வழக்கம்.

தற்போது, அ.தி.மு.க.,வானது, பழனிசாமி, பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது. இதனால், வழக்கத்திற்கு மாறாக, பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைக்கும் பணியை துவக்காமல், அ.தி.மு.க..,வினர் துாக்கத்தில் உள்ளனர்.


பொறுப்பான எதிர்க் கட்சியாகக் கூட அவர்களால் செயல்பட முடிய வில்லை. இதனால், அக்கட்சி தொண்டர்கள்உற்சாகம் இழந்து, சோர்வுடன் காணப்படுகின்றனர்.

- நமது நிருபர் -

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (31)

 • Rajesh - Ontario,கனடா

  இப்போவே வயிறு கலக்க ஆரம்பிச்சிடுச்சு

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  பாஜக பூத் கமிட்டியில் இடம் பெற்றால் உள்துறை அமைச்சராக வளர வாய்ப்பு அளிப்பார்கள். டீம்காவில்...? ரவுடிப் பட்டம் கிடைக்கும்.

 • Sivagiri - chennai,இந்தியா

  ஆமாம்பா . . . நீங்கல்லாம் நல்லா வேலை செய்யோணும் . . . அப்புறமா நாங்களா பாத்து ஏதாவது போடுவோம் . . . கப்புனு புடிச்சுக்கிட்டு திரும்பி பாக்காம போயிடனும் . . . அப்பால அடுத்த எலெக்சன் வரும் போது கரீட்டா வந்துரனும் . . . புரிஞ்சிதா . . .

 • M Ramachandran - Chennai,இந்தியா

  அப்போ வாய்க்கு வந்தபடி மக்களை கொச்சையாகா திட்டும் அமைச்சர்கள் மற்றும் காட்சிப்பொறுப்பாளர்கள் பொறுப்பில்லையா ?

 • Rengaraj - Madurai,இந்தியா

  இப்படியெல்லாம் பயமுறுத்தக்கூடாது. அரவணைத்து செல்ல வேண்டும். இன்று இருக்கும் காலகட்டத்தில் ஆதாயம் இல்லாமல் வெறும் பாராட்டுக்கு பூத் கமிட்டீ உறுப்பினர்கள் வேலை செய்ய மாட்டார்கள். ஒரு நிறுவனத்தில் அல்லது கடையில் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் ஊழியர்களையே இன்று முழுமையாக வேலை வாங்க முடிவதில்லை. கட்சிக்காக வேலை பார்ப்பவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வை எப்படி எதிர்பார்க்க முடியும்?? .முன்பு மாதிரி தொண்டர்கள் தற்போது இல்லை. தோரணம், கட்சிக்கொடி , நோட்டீஸ் விநியோகம் , பேனர் வைப்பது , வால்போஸ்ட ஓட்டுவது இவை எல்லாம் காண்ட்ராக்ட் முறைக்கு சென்று விட்டது. காலம் மாறிவிட்டது. பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும். காசு கொடுத்தால் அடுத்த கட்சி தொண்டர்கள் கூட மறைமுகமாக வேலைபார்ப்பார்கள். இன்றைய அரசியல் அப்படி மாறிவிட்டது. தலைவர்களை பார்த்து தொண்டர்கள் மாற வேண்டும். அந்த அளவுக்கு கட்சியில் பிடிப்பு இருக்க வேண்டும். தலைவர்களின் தலைமைப்பண்பு அந்த அளவில் இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement