தி.மு.க.,வில் வாரிசுகளுக்கு பதவி?: டில்லி உஷ்ஷ்
புதுடில்லி: தி.மு.க.,வின் மூன்று சீனியர் எம்.பி.,க்கள் குறித்து புதுடில்லி அரசியல் வட்டாரங்களில் ஒரு செய்தி பேசப்படுகிறது. இந்த மூன்று பேரும் ஏழாவது முறை எம்.பி.,க்களாக உள்ளனர்.
இவர்கள், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்துவிட்டனராம். இதையடுத்து, 'எங்களுக்கு பதிலாக எங்களுடைய வாரிசுகளுக்கு எம்.பி., சீட் தர வேண்டும்; எங்களுடைய தொகுதிகளில் வாரிசுகள் போட்டியிட அனுமதிக்க வேண்டும்' என மூன்று சீனியர் தலைவர்களும் கட்சி மேலிடத்தில் சொல்லிவிட்டனராம்.
ஆனால், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு இது பிடிக்கவில்லை என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். 'கட்சியில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல், இவர்கள் குடும்பமே போட்டியிட்டால் தொண்டர்கள் வெறுத்துப் போய்விடுவர்; ஏற்கனவே, தி.மு.க., மீது வாரிசு அரசியல் என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு ஸ்டாலின் கோபத்தில் உள்ளாராம்.

இவர்கள் பார்லி., கூட்டத்தொடர்களிலும் மற்றும் பார்லி., நிலைக்குழு கூட்டங்களிலும் அதிகமாக பங்கேற்பதில்லை. மெதுவாக புதுடில்லி அரசியலில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.
இவர்கள், 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்துவிட்டனராம். இதையடுத்து, 'எங்களுக்கு பதிலாக எங்களுடைய வாரிசுகளுக்கு எம்.பி., சீட் தர வேண்டும்; எங்களுடைய தொகுதிகளில் வாரிசுகள் போட்டியிட அனுமதிக்க வேண்டும்' என மூன்று சீனியர் தலைவர்களும் கட்சி மேலிடத்தில் சொல்லிவிட்டனராம்.

ஆனால், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு இது பிடிக்கவில்லை என்கின்றனர் விஷயமறிந்தவர்கள். 'கட்சியில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல், இவர்கள் குடும்பமே போட்டியிட்டால் தொண்டர்கள் வெறுத்துப் போய்விடுவர்; ஏற்கனவே, தி.மு.க., மீது வாரிசு அரசியல் என்கிற முத்திரை குத்தப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டு ஸ்டாலின் கோபத்தில் உள்ளாராம்.
வாசகர் கருத்து (12)
தலைவனுக்கு ஒரு வழி மற்றவர்களுக்கு ஒரு வழியா ?
குடும்ப அரசியலே திமுகவின் தாரக மந்திரம். அதை மாற்ற வாய்ப்பே இல்லை.
உதய நிதி வருங்கள தி மு க வின் தலைமை ஏற்க மாட்டார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்
'கட்சியில் உள்ள மற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல், இவர்கள் குடும்பமே போட்டியிட்டால் தொண்டர்கள் வெறுத்து போவார்கள் 'முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனை கழுவுங்கள் -கவியரசு கண்ணதாசன் வரிகள் யாருக்கும் வெட்கமில்லை படத்தில்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
திமுகவில் வாரிசுகளுக்கு சீட் கொடுப்பார்கள் ஆனால் பாஜகவில் கட்சி மாறிவந்தால் சீட் கிடைக்கும். எங்குமே கட்சியில் பலவருடமாக உழைப்பவர்களுக்கு லாலிபாப் தான்