Load Image
Advertisement

கோவையை குறிவைக்கும் பா.ஜ.,

கோவை: மத்திய பா.ஜ., அமைச்சர்கள் அடிக்கடி கொங்கு மண்டலத்திற்கு வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி தான் இவர்கள் இங்கு வருகின்றனர்.
Latest Tamil News


வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் கொங்கு மண்டலத்திலிருந்து எப்படியாவது மூன்று எம்.பி.,க்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது தேசிய தலைமையின் குறிக்கோள். இந்நிலையில் சீனியர் பா.ஜ., தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் விரைவில் தமிழகம் வரவிருக்கிறார். இவர், சென்னையிலும், கோவையிலும் ராணுவ தளவாட வளாகம் அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் விவாதிப்பார் என சொல்லப்படுகிறது.
Latest Tamil News

இதோடு இங்கு, விமான பாகங்களை தயாரிக்கும் பணியை, சிறு தொழில் நிறுவனங்கள் வாயிலாக செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என சொல்லப்படுகிறது.

மற்ற மத்திய அமைச்சர்கள் கோவை வருவதற்கும், ராஜ்நாத் சிங் வருவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ராஜ்நாத் வருகை கோவையை ஒரு பெரும் தொழில் நகரமாக மாற்றும் என்கின்றனர், மத்திய அரசின் உயரதிகாரிகள்.


வாசகர் கருத்து (12)

  • Ram pollachi -

    பயங்கரவாதிகள், தீவிரவாதிகளையும் கண்காணித்து பிடிக்கும் வேலையை தமிழக வணிகவரி துறையிடம் விட்டுவிடுங்கள் குறி வைத்து பிடித்து விடுவார்கள். வாழ தகுதியற்ற ஊர் கோவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எங்கு பார்த்தாலும் கூட்டம் எல்லோரும் அகதிகள் போல் கோவையை நோக்கி வந்துவிட்டார்கள் சுய ஒழுக்கம், மரியாதை, கட்டுப்பாடு எதுவும் கிடையாது. பல தலைமுறையாக இங்கு வாழ்ந்த பல குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள்.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    பாஸ் டெபாசிட் கிடைக்க வாய்ப்பு இருக்கு

  • venugopal s -

    கோவையின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்தது கிடையாது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் எதுவுமே கோவையில் நிறுவப்படவில்லை.கோவையின் தொழில் முனைவோர் மற்றும் மாநில அரசு மட்டுமே அதற்குக் காரணம்.

  • அப்புசாமி -

    கோவையை குறிவக்கும் தீவிரவாதிகள். கோவையை குறி வெக்கும் பா.ஜ. கோவையை குறி வெக்கும் தி.மு.க. கோவையை குறி வெக்கும் அதிமுக. இத்தனை பேர் குறிவெச்சா என்னத்துக்காகும் கோவை.

  • sankar - சென்னை,இந்தியா

    ஏதாவது ஏடகூடமாக நடந்து ஜனங்க சிதறி ஓடும் போது சந்தடி சாக்கில் பிக்பாக்கட் அடிப்பானுங்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்