ரூ.500க்கு காஸ் சிலிண்டர்: குஜராத்தில் காங்., வாக்குறுதி

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 1 மற்றும் 5ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஆமதாபாதில் உள்ள காங்., அலுவலகத்தில் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை, ராஜஸ்தான் முதல்வரும், குஜராத்துக்கான காங்., தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட் நேற்று வெளியிட்டார்.
இதில் கூறப்பட்டு உள்ளதாவது:
குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்; 500 ரூபாய்க்கு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்; 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

கணவரை இழந்த பெண்கள், மூத்த குடிமக்களுக்கு மாதந்தோறும், 2,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். மீனவர்கள் பெற்ற, 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (9)
இப்படி தான் இலங்கை புட்டுக்குன்னு போச்சு..
இங்க இவங்க பத்தாவது பெயுளுங்க, ஆனா அவங்க (காங்கிரஸ் ) எட்டாவது பாஸ்சுங்க , இதை நீங்களே புரிஞ்சிக்கோங்கோஓஓஓ .
சிலிண்டர் விலை 1000 ம்னு வெச்சுப்போம். 500க்கு குடுத்தா வருஷம் 6000 ரூவா இலவசம். அங்கே வருஷம் ரெண்டு சிலிண்டர் இலவசம். 2000 ரூவா தான். சின்னதா ஏமாறணும்னா இவிங்களுக்கும், பெருசா ஏமாறணும்னா அவிங்களுக்கும் வாக்களியுங்கள். வாக்களிக்கும் எல்லாருக்கும் இலவசம் கிடையாதும்பாங்ஜ. அடுத்தது ரேஷன் கார்டு இருக்ஜணும்பாங்க. அதுலே, ரேஷன் கார்டுல அரிசிப் பிச்சை வாங்குறவங்களுக்கு .மட்டும்தான் இலவச, குறைந்த விலை சிலிண்டர்ம்பாங்க. நாங்க பாக்காத திராவிட மாடலா? தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டின்னு நரேந்திரரே சொல்லிட்டாரே.
காங்கிரசால் முடியும் என்றால் ஏன் தமிழகமும் அதை செய்ய கூடாது.?
100 ரூபாய் மானியம் தருவோம் என சொன்னவங்களே தேதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் தெரியாம ஓடி ஒளியரங்க . சொன்னது தான் சொல்லறீங்க இலவச சிலிண்டருடன் ரொக்கம் 500 ரூபாய் கோடுபோம் என அடிச்சுவிட்டுவீங்களா அதை விட்டு விட்டு . . . . . . . . .