காந்திகிராமம்: '' இந்தியாவின் பல்வேறு விஷயங்களுக்கு வழிகாட்டியாக தமிழகம் உள்ளது '', என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மையப்புள்ளி
பல ஆண்டுகளாக காதி பொருட்கள் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கப்பட்டது. இன்று காதி விற்பனை கடந்த 8 ஆண்டுகளில் 300 மடங்கு அதிகரித்துள்ளது. ரூ. 1லட்சம் கோடியாக காதி விற்பனை அதிகரித்துள்ளது. கதர் ஆடை சர்வதேச ஆடையாக மாறி வருகிறது.சுதேசி இயக்கத்திற்கு மையப்புள்ளியாக தமிழகம் இருந்தது. காந்தி கூறியபடி தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது.
கிராமங்களை நோக்கி
கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி(தமிழில் மோடி கூறினார்). காந்தியின் முக்கிய குறிக்கோள் கிராமத்தின் வளர்ச்சி தான்'' என்பது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
கிராமம், நகரம் என்ற வேறுபாடு தற்போது இல்லை. அந்தளவிற்கு வளர்ச்சியை எட்டி உள்ளோம்.6 லட்சம் கி.மீ., ஆப்டிகல் இழையின் மூலம் கிராமங்கள் இணைக்கப்படுகிறது. கிராமப்புற வளர்ச்சி நீடிக்க இளைஞர்கள் பங்காற்ற வேண்டும். இந்தியாவின் தற்போதைய வளர்ச்சி கிராமங்களை நோக்கி சென்று கொண்டுள்ளது.
விழிப்புணர்வு
ரசாயனம் இல்லாத விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.வடகிழக்கு மாநிலங்களில் ரசாயனம் இல்லாத விவசாயம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இயற்கை விவசாயம் நாட்டின் உரத்தேவையை குறைக்கும்.சங்க கால உணவுப்பொருடகளை மீண்டும் விளைவிக்க வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளில் சூரிய மின்சக்தி பயன்பாடு 24 சதவீதம் அதிகரிப்பு. நாட்டைமுன்னேற்ற பல திட்டங்கள் செய்யப்பட்டாலும், இன்னும் செய்ய வேண்டியவை ஏராளமானது உள்ளது.சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டசசத்து மிகுந்த உணவு குறித்து விழிப்புணர்வுடன் ருந்தனர்
புதிய தூண்கள்
சுதேசி போராட்டத்தின் மையப்புள்ளியாக தமிழகம் இருந்தது. இந்தியாவின் பல்வேறு விஷயங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. ஒற்றுமையான சுதந்திரமான இந்தியாவையே காந்தி விரும்பினார். விவேகானந்தரை வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி தமிழகம். ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் வாள் ஏந்தியது தேசப்பற்றின் உச்சம்தமிழ் சங்கமம் நிகழ்ச்சி காசியில் விரைவில் நடக்கும்.
தமிழர்களின் மொழி கலாசாரத்தை கொண்டாட தயாராக உள்ளனர். தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்.இளைஞர்கள் தான் புதிய இந்தியாவின் தூண்கள். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
பட்டமளிப்பு விழாவை முடித்துவிட்டு மீண்டும் மதுரை விமான நிலையம் கிளம்ப பிரதமர் மோடி தயாரானார். ஆனால், மோசமான வானிலை காரணமாக வான்வழி பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி மதுரை புறப்பட்டார்.
வாசகர் கருத்து (35)
நாட்டிலேயே டாஸ்மாக் தான் முன்னோடி என்பது பிரதமருக்கும் தெரிந்துள்ளது😛.
உலகத்திற்கு இந்தியா வழிகாட்டும். இந்தியாவிற்கு தமிழகம் வழிகாட்டும்.தமிழகத்திற்கு காந்திகிராமம் வழிகாட்டும்.
குறள் ஒண்ணும் சொல்லலியே...
அப்புடியா? சொல்லவே இல்லை.
குல்லாவைத் தவிர மத்த எல்லா காதி தயாரிப்பு. போதுமா .