ADVERTISEMENT
திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை நடந்த பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு பிரதமர் நரேந்திர மோடி கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்த மோடியை, கவர்னர் ரவி முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். அப்போது, 'பொன்னியின் செல்வன்' ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகத்தை மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

அந்த இடத்தில் இருந்து கார் மூலம் காந்திகிராம பல்கலைக்கு வந்தார். வழியில், மேள தாளங்கள் முழங்க பா.ஜ., தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கார் கதவை திறந்து வெளியே வந்து வரவேற்பை ஏற்று அவர்களை நோக்கி நரேந்திர மோடி கையசைத்தார்.
பிறகு, பல்கலையில், அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உடன் பட்டமளிப்பு விழா துவங்கியது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை மோடி வழங்கினார்.
வாசகர் கருத்து (22)
பொதுவா பாக்குறப்ப இளையராஜாக்கு டாக்டர் பட்டம் தப்பு இல்ல. எத்தனை ஹிட் பாடல். இவர் பாட்டு இல்லா வீடு எது
பொன்னியின் செல்வன் ஒரு புதினம் .... அதற்கு பதிலாக ...சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்கள் எழுதிய "விடுதலைப்போரில் தமிழகம்" புத்தகத்தை பரிசாக கொடுத்திருக்கலாம் ....
பாடகரை கொடுமை படுத்தியவர்
அடுத்த ராஜ்யசபா எம்.பி நம்ம சிவராமையர்தான்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இரண்டு பெரும் டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர்கள் தான் வாழ்த்துக்கள்