Load Image
Advertisement

ராஜிவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு

 ராஜிவ் கொலையாளிகள் 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT
புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரளிவாளனை தொடர்ந்து நளினி, முருகன் , ரவிந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த போலீஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர். இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, 1999ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், கருணை மனு பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பேரறிவாளனை, தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதைத் தொடர்ந்து நளினி உள்ளிட்டோர் தங்களையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தமிழகஅரசும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் விசாரித்தனர்.

Latest Tamil News

இந்நிலையில், இந்த மனு மீது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நளினி, முருகன், சாந்தன், ரவிந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரையும் விடுதலை செய்யப்படுகின்றனர்.பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும். இதனால், 6 பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த 6 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு மாநில அமைச்சரவை அனுப்பி வைத்தது.


மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா? என்ற கேள்விக்கும், மாநில அமைச்சரவையின் முடிவுகளை மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு விட்டது. தமிழக அரசின் பரிந்துரையை கவர்னர் ஏற்றிருக்க வேண்டும். நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரின் நடத்தை நன்றாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் பிறப்பித்தனர்.


வாசகர் கருத்து (112)

  • Gjayaraman - Vellore,இந்தியா

    மனசாட்சி உள்ள எவரும் இந்த தீர்ப்புகுறித்து நீதி வென்றதாக கருதுவர். கவர்னர் என்பவர் கடவுள் இல்லை. நீதிமன்றங்களுக்கு வழங்கி உள்ள அதிகாரங்கள் சரியானதே.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    The comments are in the nature of suggestions namely 1. The clemency powers accorded to the Governors and President should be abolished.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    Another aspect of our IPC and judicial tem is awarding of Life Sentences. Is ther a concrete or specific mention about the period of life imprisonment.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    It is time that our constitution is readjusted. The clemency powers accorded to the Governor's

  • nv -

    மிக துரதிஷ்டவசமானது.. நீதி துறை இதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.. இது பிற்காலத்தில் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement