பெங்களூரு: சென்னை சென்ட்ரல் -- மைசூரு இடையே வந்தே பாரத் ரயிலின் சேவையை, கர்நாடகா மாநிலம், பெங்களூரில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தென் இந்தியாவில் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும்.
* சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்படும் ரயில், பெங்களூரு வழியாக நண்பகல் 12:20 மணிக்கு மைசூர் சென்றடையும். மைசூரில் இருந்து மதியம் 1:05 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 7:30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.
*அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயிலில், 16 பெட்டிகள் உள்ளன; 1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும்.
*வந்தே பாரத் ரயிலின் வழக்கமான சேவை, சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு வரும், 12ம் தேதி துவங்கிறது. இந்த ரயில் புதன்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்.
*இந்த ரயில், காட்பாடியில் காலை, 7:21 மணிக்கும்; கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் காலை, 10:20 மணிக்கும் நின்று செல்லும்.
*மைசூரில் இருந்து வரும் ரயில், கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் பிற்பகல், 2:55 மணிக்கும், காட்பாடி சந்திப்பில் மாலை, 5:36 மணிக்கும் நின்று செல்லும்.
ரயில் சேவை துவக்கப்படுவது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தொழில்துறை மையமாக திகழும் சென்னையையும், தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப் மையமாக திகழும் பெங்களூரு, மற்றும் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மைசூருவையும் வந்தேபாரத் ரயில் இணைக்கும் எனக்கூறியுள்ளது.
முன்பதிவு துவக்கம்
சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலுக்கானடிக்கெட் முன்பதிவு துவங்கி விட்டது. இந்த ரயிலில் பயணிக்க எந்தவித சலுகையும் கிடையாது.சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு, 'ஏசி' சேர் கார் கட்டணம், 1,275 ரூபாய்; 'ஏசி' சிறப்பு வகுப்பு பெட்டி, 1,980 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை - காட்பாடிக்கு 'ஏசி' சேர்கார் கட்டணம் 495 ரூபாய்; சிறப்பு வகுப்பில், 950 ரூபாய்; கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு 'ஏசி' சேர்கார் கட்டணம் 995 ரூபாய்; சிறப்பு வகுப்பில், 1,885 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இன்றைய நிகழ்ச்சியில், பாரத் கவுரவ் காசி தரிசன ரயில் சேவையையும் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
பாரத் கவுரவ் திட்டத்தில், மத்திய ரயில்வேத்துறையுடன் கர்நாடக அரசும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், கர்நாடகாவில் இருந்து சுற்றுலா பயணிகள், காசிக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பெங்களூருவில் உள்ள சட்டசபை வளாகத்தில் உள்ள கவிஞர் கனகதாசா மற்றும் மகரிஷி வால்மிகிக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வாசகர் கருத்து (10)
பஞ்சாமிர்தம் யாருக்காக? யாருக்காக?
Shatabdi should be continued and this new train should be rescheduled to leave CHN at 7 am or so.
இல்லை ரயில் இன்ஜின் ஜாக்கிறதை
திராவிஷங்களின் விஷ கருத்துக்கள் இன்னமும்.பதிவு செய்யப்படவில்லையே ஏன்? தமிழகம் வஞ்சிக்கபடுகிறது, காலையில் தமிழர்களை முன்னதாக எழுப்பிவிடவெண்டும் என்ற கெட்ட எண்ணத்தில்தான் காலையில் 5.50க்கு இந்த ரயிலை சென்னையில் இருந்து புறப்படுகிறது போன்ற தமிழ் சிந்தனைகள் என்னவாயிற்று?
சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் ஆவடியில் ஒரு நிமிடம் நிறுத்தினால் பெரியளவில் மக்கள் பயன்பெறுவார்கள். கட்டணத்தில் கூட வித்தியாசம் வேண்டாம் ஆவடி அம்பத்தூர் என்று மக்கள்தொகை மிகுந்த சென்னையின் மேற்கு பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்துவார்கள். அதுபோல சென்னை எழும்பூர் மதுரை தேஜாஸ் ரயிலை தாம்பரத்தில் ஒரு நிமிடம் நிறுத்தி சென்றால் சென்னை தெற்கு பகுதி மக்கள் பெரும் பயனடைவார்கள்.