நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பிரச்னைக்குரிய இடங்களில் 54 சர்ச்சுகள் கட்ட அனுமதி கொடுக்க முயற்சி நடப்பதாக பா.ஜ., எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி மற்றும் பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ் ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அனுமதி வழங்கக்கூடாது
"1982 மதகலவ ரத்தின்போது மக்கள் எவ்வளவு துன்பப்பட் டார்கள் என்பதை நாம் அறிவோம். அதைத்தொடர்ந்து வேணுகோ பால் கமிஷன் ஆய்வு செய்து அறிக்கையில் ஒரு வழிபாட்டுத்தலத் துக்கு அருகே மற் றொருவழிபாட்டுத்தலம் அமைக்க அனுமதிக்கக் கூடாது என கூறப்பட்டு உள்ளது.
அதை மீறி மாவட்ட நிர்வாகம் பல வழி பாட்டு தலங்களுக்கு அனுமதி வழங்குவதால் மக்கள் மத்தியில் பய மும், பதற்றமும் ஏற்படு கிறது. வேணுகோபால் கமிஷன் அறிக்கையை மீறி எந்த வழிபாட்டு தலத்துக் கும் அனுமதி வழங்கக் கூடாது.
அந்த கமிஷன் ஷரத்துகளை நீர்த்துப் விதமாக போகச்செய்யும் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. மீண் டும் அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது மக்கள் மன அமைதியோடும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும். எனவே புதிய வழிபாட்டு தலங் களுக்கு அனுமதி வழங் குவதை மாவட்ட நிர்வா கம் நிறுத்த வேண்டும்.
மத கலவரத்திற்கு முயற்சி
அமைச்சர் மனோதங்கராஜ் சிறுபான்மையினரின் வாக்குகள் பா.ஜ. வுக்கு சென்றுவிடும் என்பதால் அவர் மீண்டும் ஒரு மதகலவரம் உருவாக்க முயல்கிறார். அதற்காக ஏற்கனவே பிரச்னையில் இருக்கும் இடங்களில் சர்ச் கட்ட கலெக்டரும், எஸ்.பி யும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.
திங்கள் சந்தை புதுவிளையில் ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்போடு சர்ச் கட்டப்படுகிறது. புத்தளம் பகுதியில் 35 வருடமாக தடை செய்யப்பட்ட இடத்தில் இப்போது வழிபாட்டு தலமாக ஆக்க முயற்சிக்கிறார்கள். சமூக நலக்கூ டம், வீடு என அனுமதி பெற்று சர்ச் நடத்துகிறார்கள். இதுபற்றி பலமுறை கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளோம்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இந்த நிலையில் பழமையான கோவில்களை புனரமைக்கும்போது அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்னைக்குரிய இடங்களில் உள்ள 54 சர்ச்சுகளுக்கு புதிதாக அனுமதி கொடுக்கும் முயற்சி நடந்து வருகிறது.
அதை எதிர்ப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்களை அழைத்து உங்களுக்கு என்ன பிரச்னை என கலெக்டர் கேட்கிறார். மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதால் முதல்வரையும்,தலைமை செயலரையும் சந்திக்க அனுமதி கேட்டு8.10.2022 அன்று கடிதம் கேட்டிருந்தோம்.
இது வரை தகவல் இல்லை. எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி தலைமையில் டிசம்பர் 11ம் தேதி சமூகநல்லிணக்க உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். எல்லா சமூகத்தினரும் ஒன்றாக சேர வேண்டும். அனைவரும் சமாதானமாகவும், சந்தோஷமாகவும் வாழ இந்த உண்ணாவிரதத்தைமேற்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்ந்து பொன். ராதாகிருஷ்ணன் கூறிய தாவது:
மிக மட்டமான விஷயம்
கட்சியினர் தங்களுக்குஅரசியல் ரீதியாக ஒட்டு கிடைப்பதற்காக இதுபோன்ற செயல் படுகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமும் தமிழகத்தின் பிற சேர்ந்து இதுபோன்று செயல்படுவது மிக மட்டமான விஷயம்.
மாவட்டங்களிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் வேணுகோபால் கமிஷன் அறிக்கையை செயல்படுத்த வேண்டும். குமரி மாவட்டத் தில் அதை செயல்படுத்த முடியாது எனக்கூறும் முதல் ஆட்சியராக இப்போதைய கலெக்டர் இருக்கிறார். இந்த ஆட் சியர் மூன்று ஆண்டுக ளில் மாறிவிடுவார்.
வழிநடத்துவது யார்...
குமரியில் ஏற்கனவேநடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட வடு தொடர்ந்து கொண்டுஇருக்கிறது. ஆளும் கட்சியின் அடியாளை போல மாவட்ட கலெக்டர் செயல்படக்கூடாது. ஆட்சியரின் நிலைபாடு தனி, அரசியல் வாதிக ளின்நிலைபாடு தனியாக இருக்க வேண்டும்.
அமைச்சருடன் அவரது மகனும் உட்கார்ந்து இந்த மாவட்டத்தின் நிர் வாகம் எப்படி இருக்க வேண்டும் தீர்மானிக்கி றார். அமைச்சர், மாவட்ட கலெக்டர், காவல் துறை கண்காணிப்பாளர், நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் ஆகியோர் கலந்து கொண்ட கூட் டத்தில் அமைச்சரின் மகன் லேப்டாப் வைத்துக்கொண்டு இன்ஸ்டி ரெக்ஷன் கொடுக்கிறார். மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துவது யார் என்பது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின் போது, மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில மக ளிர் அணி தலைவி உமா ரதி, மாநில செயலாளர் மீனா தேவ், மாவட்ட துணை தலைவர் தேவ், பொதுசெயலாளர் ஜெக நாதன், நகர தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து (25)
80% பெரும்பான்மை ஹிந்துக்கள், திருட்டு திமுகவின் அயோக்கிய தனத்தை புரிந்து கொள்ளாத வரை இது நடந்து கொண்டே இருக்கும் ... இப்போது மக்கள் மெதுவாக புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள்.
நாடர்கோவிலில் பிஜேபி தோற்பது உறுதி. பொன்னார் தனக்கு சீட் கிடைக்காதலால் பிஜேபி தோற்று அண்ணாமலை அசிங்கப்பட வைக்க இப்படி செய்கிறாரோ? அண்ணாமலை அனுமதியுடந்தான் இந்த போராட்ட்டம் நடக்கிறதா?
"திமுக" கமிஷன் பரிந்துரையை மீறும் மாவட்ட கலெக்டர் என்று அர்த்தம் வருகின்றது
சர்ச் கன்னியாகுமரியில் கட்டுவது என்ன தவறு???நாங்கள் குடும்ப சுற்றுலாவாக திருச்செந்தூர் டு கன்னியாகுமரி சென்றோம். அப்போது தங்குமிடத்தில் மாடியிலிருந்து பார்த்தால் எந்த பக்கம் திரும்பினாலும் சர்ச்???அப்போ தான் தெரிந்தது அது கிறித்துவ மாவட்டம் ஆகிவிட்டது என்று???அப்போ சர்ச் தான் அங்கே காட்டுவார்கள் கோவில் அல்லவே அல்ல. இன்னும் சில நாட்களில் அங்கு இப்படி சட்டம் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - இங்கு இந்துக்கள் தங்க சர்ச்சின் அனுமதி வேண்டும்?????பணம் கொடு என்ன என்ன என்ன வேண்டுமானலும் ரெடி ஜாதி இப்போது கிறித்துவ கன்வெர்ஷன் இந்த ரெண்டும் ஒன்று தான்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
புதிய வழிபாட்டுத் தலங்கள் கட்டுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் வரையறுக்க வேண்டும்.