மீனாட்சி அம்மன் கோயிலின் ரூ.50 கோடி சொத்து மீட்பு
மதுரை, -மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அதன் உப கோயில்களுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் மீட்கப்பட்டன.
இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதும் பல இடங்களில் நிலம் உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. கோயிலுக்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைகள், சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்தது.
தல்லாகுளம் பகுதியில் ஒரு ஏக்கர் 7 சென்ட் நிலமானது சூறாவளி சுப்பையர் அறக்கட்டளை மூலம் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அதை தனிநபர் ஆக்கிரமித்திருந்தார். நீதிமன்றம் மூலம் ஹிந்து சமய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் இந்நிலம் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக அப்பகுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மதிப்பு ரூ. 50 கோடியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!