வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்குவதால், தமிழகத்துக்கு இன்று அதிகன மழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 'இன்று, 32 மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக, தமிழகத்தில் 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
1. சென்னை
2. காஞ்சி
3. திருவள்ளூர்
4. செங்கல்பட்டு
5. வேலூர்
6. ராணிப்பேட்டை
7. திருவாரூர்
8. தஞ்சாவூர்
9. நாகை
10. மயிலாடுதுறை
11. விழுப்புரம்
12. அரியலூர்
13. கடலூர்
14. பெரம்பலூர்
15. புதுக்கோட்டை
16. சேலம்
17. திருவண்ணாமலை
18. கள்ளக்குறிச்சி
19. ராமநாதபுரம்
20. திருச்சி
21. மதுரை
22. தேனி
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:
1. சிவகங்கை
2. நாமக்கல்
3. கரூர்
4. தருமபுரி
5. திண்டுக்கல்
புதுச்சேரியிலும் விடுமுறை:
'ரெட் அலெர்ட்'டை தொடர்ந்து புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (2)
For first year engineering students after all holidays hardly one month will be the teaching hours and that too with much qualified lecturers in all private colleges except few. How quality of education will improve. Govt schools, our CM can do home delivery the breakfast and Lunch as most of the days all schools are on leave.
மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் விடுமுறை விடாத அதுவும் இந்த கனமழை பெய்யும் நேரம் பிள்ளைகள் வீட்டில் மின்சாரம், இன்டர்நெட் சரிவர கிடைக்காமல் கஷ்டபடுவார்களே என்பது கூட பள்ளி மேலாளர்களுக்கு தெரியாதா அல்லது அரசு உத்தரவை நாம் எதற்கு மதிக்கணும் என்று வகுப்பு நடத்துகின்றனரா...