ADVERTISEMENT
சென்னை: கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே பணிகளை உடனடியாக நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை என தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், காடுகள் குறித்து கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே பணிகளை கடந்த நவ.,1ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது. இந்த பணியில் 1,500 சர்வேயர்கள், 3,200 உதவியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 4 ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எல்லை பகுதிகளில், விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கேரள அரசின் நடவடிக்கை தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், தமிழக கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமங்களில் கேரள அரசு ரீசர்வே பணிகளை துவங்கும் முன் இரு மாநில எல்லைகள் தொடர்பான நில அளவை மற்றும் இதர ஆவணங்களுடன் கூட்டு ஆலோசனைக்குழு கூட்டம் தமிழக கேரள எல்லைகளை சேர்ந்த அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படும் எனக்கூறினார்.
அமைச்சரின் கருத்து தொடர்பாக தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், தமிழக கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு தமிழக நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் என ஆக்கிரமித்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பல நிலங்களில் வலுக்கட்டாயமாக 'இது கேரள மாநிலத்திற்கு சொந்தமான இடம்' என்ற அறிவிப்பு பலகையை வைத்து செல்வது நில ஆக்கிரமிப்பின் உச்சகட்டம். பல லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி வளைத்து போட முயற்சி செய்வதை தமிழக அரசு கண்டிக்காமல் மவுனம் காப்பது முறையல்ல.
இது குறித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், விரைவில் இரு மாநில அரசுகளும் இணைந்து மறு ஆய்வு நடத்தும் எனக்கூறியுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது. 'வரும் முன் காப்போம்' என்றவர்கள், ' போன பின் பார்ப்போம் ' என்று அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக தமிழக எல்லையில் அத்து மீறி செயல்படும் கேரள கம்யூனிஸ்ட் அரசை கண்டித்து மறு ஆய்வு பணிகளை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. கம்யூனிஸ்ட்களுக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்த திமுக அரசு இப்போதாவது விழித்து கொண்டு தமிழர்களுக்கு கேரள கம்யூனிஸ்ட் அரசு செய்யும் துரோகத்தை தட்டி கேட்க வேண்டும்' . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (7)
அதுவும் த்ரவிட நாட்டின் ஒரு அங்கம்தானே? பிறகு மலையாளம் கற்பிப்போம். அதுவும் திராவிஷ மொழிகளில் ஒன்று என்று விட்டுவிடுங்களேன்.. பிறகு அவர்களை விட்டு ஆளச்சொல்வத்துதானே? அதுதானே நடக்காது? பிறகு நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது? மொழியும், ஆட்சியும் திராவிடியா கட்சியின் இரு கண்கள்.
கட்சத்தீவு மாதிரி ரேட் பேசி இருப்பார்கள்
கச்சத்திவை இவர்களது ஆட்சியில்தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இப்போது அதேமாதிரி தேனீ பகுதிகள் கேரளாவிற்கு இவர்களது ஆட்சியில் தாரை வார்த்துக்கு கொடுக்கப்போகிறார்கள் இப்படியே போனால் எஞ்சியது தஞ்சையும் திருச்சியும்தான் ஆகும்
இருப்பதை மாற்ற கேரள அரசுக்கு அனுமதி கொடுத்தது யார் .தமிழக அரசு கொடுத்ததா விளக்க வேண்டும்.பிஜேபி போராட்டம் நடத்த வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும், தமிழகத்துக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை!