ADVERTISEMENT
மதுரை: மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை திருமங்கலத்தில் இருந்து கருமாத்தூர் செல்லும் வழியில் உள்ள அழகுசிறை என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த விபிஎம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 13க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

உயிரிழந்தவர்கள், வடக்கன்பட்டியை சேர்ந்த வல்லரசு, கோபி, விக்கி, மகாலட்சுமி, பிரேமா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கம்மாள், கருப்பசாமில மகாலெட்சுமி, ஜெயபாண்டி, பச்சைக்காள், கருப்பாயி, அன்னலெட்சுமி, மாயாத்தாள், பாண்டியம்மாள், பேச்சியம்மாள் உள்ளிட்டோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையின் 2 வெடிமருந்து கிடங்குகளில் பணியில் இருந்த 5 தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ரூ.5 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இங்கேயெல்லாம் வேலை செய்ய வெளி மாநில ஆளுங்க வரமாட்டாங்க. இவிங்களுக்கு குடுக்க 5 லட்சம், 10 லட்சமெல்லாம் எங்கேருந்து வருது? கட்டுமரத்தின் குடும்ப நிதியா.... இவிங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுப்பது கட்டாயமாக்கணும்.