Load Image
Advertisement

ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு: பா.ஜ.,வுக்கு மா.கம்யூ., ஆதரவு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ., அரசை ஆதரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளதாக மா.கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் செல்லும் என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பளித்தது.


இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு அளிக்கப்போவதாக திமுக தலைமை அறிவித்தது. அனைத்துக் கட்சி கூட்டம் நவ.,12ல் நடத்தவும் திமுக அரசு முடிவு செய்தது.


திமுக.,வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக.,வின் முடிவுக்கு மாறாக பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ஜ., அரசை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.


சென்னை பெரம்பலூரில் நடைபெற்ற அக்கட்சி பேரணியில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சாதிய ஏற்றத்தாழ்வு நிறைந்திருக்கும் இச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு சாதிய அடிப்படையில் வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.


Latest Tamil News
75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை நாங்கள் 1990ம் ஆண்டு முதல் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.


அதனை பிரதமர் மோடி கொண்டுவந்தபோது நாங்கள் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். கூட்டணியில் இருப்பதால் அனைத்து கட்சிகளும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் தனித்தனி கொள்கைகள், கோட்பாடுகள் இருக்கத்தான் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

திமுக அதிர்ச்சிகூட்டணி கட்சியான மா.கம்யூவின் இந்த அறிவிப்பு திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.வாசகர் கருத்து (24)

 • Venkat Subbarao - Chennai,இந்தியா

  இப்பொழுதாவது இவர்களுக்கு புத்தி வந்ததே அது வரை மகிழ்ச்சி இன்னும் சிறுது காலத்தில் இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அளவுகோலின் அடிப்படையிலேயே நிகழும் அப்பொழுதுதான் உண்மையான சமூக முன்னேற்றம் ஏற்படும்.இல்லையேல் ஒரு குறிப்பிட்ட ஜாதியிலேயே இருப்பவர்கள் ஆண்டாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக கொளுத்த பணக்கரார்களாக இருப்பார்கள்

 • Sutha - Chennai,இந்தியா

  எல்லா ஒதுக்கீட்டுகளிலும் வருமானத்தின் அடிப்படையில் இது போன்று 80% ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால் சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  ஒரு சிந்தனைவாதியின் கருத்து பிரச்னை ஏற்பட்டால் நீதிமன்றம் செல் என்பார்கள், அங்கு நீதி சொல்ல அவர்களே இருப்பார்கள் என்ற வலிமை இருப்பதால். இன்று சட்டம் இயற்றும் இடத்தில் மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் நிர்வகிக்கும் இடத்திலும் இருப்பதால் யாரும் கேட்டு போராடமாலேயே இந்த இட ஒதுக்கீடு ஒப்புதல் ஆகி இருப்பதை விளங்கி கொள்ள முடியும். ஏழைகளுக்காக போராடும் கட்சியை கொண்டவர்கள் இந்த வருமான வரம்பின் வித்தியாசத்தை ஏற்று கொண்டிருப்பது மக்களை தங்களின் சுய நலம் என்று வரும்போது நிர்கதியாக்குவார்கள் என்பது புலப்படுகின்றது.

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  எட்டு லட்ச ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது ஏழைகளுக்கானதா...

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  "ஊழல் ஒலி"யில் நாளை இருக்குது கம்மிங்களுக்கு வேட்டு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement