Load Image
Advertisement

குஜராத் தேர்தல்: பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஜடேஜா மனைவி, ஹர்திக் படேலுக்கு வாய்ப்பு



ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ., இன்று (நவ.,10) வெளியிட்டது.

Latest Tamil News


குஜராத் சட்டசபை தேர்தல், டிச., 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடக்கவுள்ளது. 'டிச., 8ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்' என, தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.


38 பேருக்கு கல்தா:





இந்நிலையில் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பா.,ஜ., இன்று(நவ.,10) வெளியிட்டது. அதில், கட்லோடியா சட்டசபை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிட உள்ளார். ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ.,வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ஜடஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா போட்டியிடுகிறார். கடந்த முறை எம்.எல்.ஏ.,க்களாக இருந்த 38 பேருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.




ஹர்திக் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கியது பா.ஜ.,:





காங்., கட்சியில் இருந்து விலகி பா.,ஜ.,கவில் இணைந்த ஹர்திக் பட்டேலுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிட பாஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. பட்டேல் குஜராத்தின் வீரம்கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், வேட்பாளர் பட்டியலில் 14 பெண்கள் உட்பட பழங்குடியினரும் இடம் பெற்றுள்ளனர்.

Latest Tamil News


மும்முனை போட்டி:





குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது. அந்த கட்சி தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களை கவரும் வகையில் பேசி வருகிறார்.


'இந்த முறை பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும் தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் அளிப்போம்' என, கெஜ்ரிவால் கூறி வருகிறார். இதனால் குஜராத் தேர்தல் களத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (8)

  • Raj Sudarsanam - North Carolina,யூ.எஸ்.ஏ

    மக்கள் மத்தியில எட்டு வருடமா அப்படித்தான் நல்லவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்... இந்த தமிழ் நாட்ல தான் திருந்தாத ஜென்மங்கள் ஓசிக்காக ஒரு திருட்டு குடும்பத்தையே தேர்ந்தெடுத்து கொண்டு இருக்காங்க...

  • Rajamanickam - Madhurai,இந்தியா

    குசராத்து மக்களுக்கு நல்ல புத்தி இருந்தால் இந்த பாஜக கும்பலை அடித்து விரட்டட்டும்...இல்லையேல் கமிஷன் வாங்கிக்கொண்டு பாலம் விபத்தை நடத்தியதுபோல பல இன்னும் நடக்க செய்வான்....

  • r ravichandran - chennai,இந்தியா

    தேர்தல் உள்ளதோ , இல்லையோ பிஜேபி கட்சி வருடம் முழுவதும் தேர்தல் பணி செய்து கொண்டிருக்கும் ஒரு கட்சி. தேர்தல் வியூகம் அமைப்பதில் மோடி மற்றும் அமித்ஷா போன்றவர்கள் விற்பனயைாளர்கள். ஒரு தோல்வி அடைந்தாலும் அதில் இருந்து பாடம் கற்று கொண்டு வியூகத்தை மாற்றி அமைக்கும் கட்சி பிஜேபி.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    நல்லவர்கள் வெற்றி பெறட்டும்.நாடும் நலமாக இருக்கணும் நாமும் நலமாக இருக்கணும்.மதங்களை கடந்து மக்கள் நலனை பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement